ADVERTISEMENT

நடிகர் வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை!

07:30 AM Apr 09, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

94-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா சமீபத்தில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறந்த நடிகருக்கான விருது 'கிங் ரிச்சர்ட்' படத்திற்காக வில் ஸ்மித்துக்கு வழங்கப்பட்டது.

ஆஸ்கர் விழாவில், வில் ஸ்மித்தின் மனைவியான ஜடா பிங்கெட் ஸ்மித்தின் முடியற்ற தலையை ’ஜி.ஐ. ஜேன்’ படத்தில் வரும் டெமி மூரின் தோற்றத்துடன் ஒப்பிட்டு தொகுப்பாளர் கிறிஸ் ராக் கிண்டலடித்தார். இதைக் கேட்ட வில் ஸ்மித் உடனே இருக்கையிலிருந்து எழுந்து ஆஸ்கர் மேடை ஏறி தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை கன்னத்தில் ஓங்கி அறைந்து மேடையில் இருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இதனைத் தொடர்ந்து தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்த வில் ஸ்மித் ஆஸ்கர் அகடாமியிடமும் மன்னிப்புக் கோரினார். இருப்பினும் அகாடமியின் நடத்தை விதிகளை மீறியுள்ளதாக வில் ஸ்மித் மீது ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில் நடிகர் வில் ஸ்மித் 10 ஆண்டு காலம் ஆஸ்கர் விருது விழா மற்றும் அகாடமி நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த 10 ஆண்டுகால தடையை ஏற்றுக்கொள்வதாகவும், அகாடமியின் முடிவை மதிப்பதாகவும் நடிகர் வில் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT