இந்தியாவில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த 21 நாள் தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு முக்கிய நிகழ்வுகள், திரைப்பட வெளியீடுகள், படப்பிடிப்புகள் ஆகியவை தள்ளி வைக்கப்பட்டன. இதனால் திரைத் துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் பலரும் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisment

Movie stars gave funds to cinema workers

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊரடங்கால் வேலையிழந்துள்ள 25,000 தினக்கூலி சினிமா தொழிலாளர்களுக்கு நடிகர் சல்மான் கான் உதவ உள்ளதாக தகவல் வெளியாகின. அதன்படி திரைத்துறையில் உள்ள தினக்கூலி பணியாளர்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் சல்மான்கான் நிவாரணத் தொகையை செலுத்தி வருவதாக இந்திய சினிமா ஊழியர்கள் சம்மேளனத்தின் (FWICE) தலைவர் பி.என்.திவாரி கூறியுள்ளார்.

nakkheeran app

Advertisment

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொருளாதார உதவிகள் தேவைப்படும் 23,000 தினக்கூலி தொழிலாளர்களின் இறுதிகட்டப் பட்டியலை சல்மான்கானிடம் கொடுத்தோம். தவணை முறையில் அவர்களுக்கு பணம் செலுத்துவதாக சல்மான் கான் கூறியிருந்தார். அதன்படி 09.04.2020 அன்றுதொழிலாளர்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் முதற்கட்டமாக தலா 3000 ரூபாயை சல்மான் கான் செலுத்தியுள்ளார். சில நாட்கள் கழித்து மீண்டும் பணம் செலுத்துவதாகவும் கூறியுள்ளார். எங்கள் தொழிலாளர்களுக்கு உதவும் அவருக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்" என கூறப்பட்டுள்ளது. இவர்கள் சொல்கிற கணக்குபடி நடிகர் சல்மான்கான் 6 கோடியே 90 லட்ச ரூபாய் செலுத்தியுள்ளார் சல்மான்கான்.

இதேபோல் நடிகர் அமிர்தாப்பச்சன் இந்தி மட்டுமின்றி பல்வேறு மொழி திரைப்பட தொழிலாளர்கள் 1 லட்சம் பேருக்கு குடும்பத்துக்கு ஒரு மாதத்துக்கான மளிகை பொருட்களை வழங்க ஏற்பாடு செய்துள்ளார். தமிழகத்தில் ரஜினிகாந்த் ரூ. 50 லட்சம்,அஜித் 25 இலட்சம், தனுஷ் ரூ. 15 லட்சம், சூர்யா, கார்த்தி, சிவக்குமார் குடும்பத்தினர் ரூ. 10 லட்சம், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் ஆகியோர் தலா ரூ. 10 லட்சம், நயன்தாரா 20 இலட்சம்கொடுத்துள்ளனர், இன்னும் சிலர் அரிசி மூட்டைகள் உள்ளவற்றைகொடுத்துஉதவினர். தற்போது ராகவா லாரன்ஸ் ஃபெப்சி சங்கத்திற்கு 50 இலட்சம் கொடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.