ADVERTISEMENT

திருமணப் பந்தத்தில் இணைந்த 93 வயது விண்வெளி வீரர்

06:52 PM Jan 23, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

நீல் ஆம்ஸ்ட்ராங்குக்கு பிறகு இரண்டாவதாக நிலவில் காலடி வைத்தவரான அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி வீரர் பஸ் ஆல்ட்ரின் தனது பிறந்தநாளில் சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டுள்ள பதிவு ஒன்று தற்போது உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது.

பஸ் ஆல்ட்ரின் தனது ட்விட்டர் கணக்கில், "எனது 93வது பிறந்தநாளில் என்னுடைய நீண்டநாள் காதலியான அன்க்கா ஃபர் என்பவரை திருமணம் செய்துகொண்டதை மகிழ்ச்சியுடன் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். லாஸ்ஏஞ்சலில் எங்கள் திருமணம் நடைபெற்றது. பதின்பருவ இளைஞர்களைப் போல நாங்கள் உற்சாகமாக உணர்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவுக்கு உலகம் முழுவதிலிருந்து பலரும் தங்களது வாழ்த்துகளை பஸ் ஆல்ட்ரினுக்கு தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT