
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, கடந்த வருடம்‘பெர்சவரன்ஸ்’ என்ற விண்ணூர்தியை (ரோவர்)செவ்வாய்க்கு அனுப்பியது.இந்த விண்ணூர்தி செவ்வாய் கிரகத்தில் செய்யும்ஆய்வு மூலம், அங்கு உயிர்கள் இருக்கிறதா என்பது குறித்து தெரிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படும் எனஏற்கனவே நாசாதெரிவித்திருந்த நிலையில், கடந்த மாதம் 18 ஆம் தேதி செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதோடு, செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பைபுகைப்படம் எடுத்தனுப்பியது.
செவ்வாய் கிரகத்தில் ‘பெர்சவரன்ஸ்’ விண்ணூர்தியைத் தரையிறக்கும் இந்தத் திட்டத்தில், வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாட்டு இயக்கத்தின் தலைவர் (Guidance & Controls Operation Lead) என்ற பொறுப்பைஇந்தியவம்சாவளியைச் சார்ந்தஸ்வாதிமோகன்ஏற்று திட்டத்தை வழிநடத்தினார். இந்நிலையில் இந்தத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோபைடன்,‘பெர்சவரன்ஸ்’ திட்டக்குழுவிற்கு காணொளிவாயிலாக பாராட்டு தெரிவித்தார்.
அப்போதுஸ்வாதிமோகனிடம்பேசிய அவர், "இது நம்ப முடியாத கௌரவம். மேலும் இது ஆச்சரியமாக இருக்கிறது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர்கள் நாட்டில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்" எனத் தெரிவித்தார். அப்போது அவர் உதாரணமாக இந்தியவம்சாவளியைச் சேர்ந்தவர்களான அமெரிக்கதுணை அதிபர் கமலாஹாரிஸ், தனக்கு உரை வடிவமைக்கும் வினய்உள்ளிட்டோரைக் குறிப்பிட்டார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)