ADVERTISEMENT

இலங்கையில் மேலும் 9 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர்! 

07:52 PM May 20, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இலங்கையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான அரசில் ஒன்பது புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

இலங்கையில் ஏற்கனவே நான்கு புதிய அமைச்சர்கள், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே முன்னிலையில் பதவியேற்றுக் கொண்ட நிலையில், தற்போது மேலும் ஒன்பது அமைச்சர்கள் புதிதாகப் பதவியேற்றுக் கொண்டதால், அமைச்சர்களின் எண்ணிக்கை 13- ஆக அதிகரித்துள்ளது. இதில் வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்புத்துறை அமைச்சராக நலீன் பெர்ணான்டோ, சுற்றுலாத்துறை அமைச்சராக ஹரின் பெர்ணான்டோ பதவியேற்றுக் கொண்டனர். அதேபோல், நிமல் சிறிபால டி சில்வா, டக்ளஸ் தேவானந்தா, மஹிந்த அமரவீர உள்ளிட்டோரும் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.

பாதுகாப்பு அமைச்சராக அலெக்ஸ் பதவியேற்றுக் கொண்டுள்ளார். இந்த நிலையில், அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்ட ஹரின் பெர்ணான்டோ, மனுஷ நானயக்கார ஆகியோரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்தது ஐக்கிய மக்கள் சக்தி.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அரசுக்கு ஆதரவு தெரிவித்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தங்களது கட்சி உறுப்பினர்கள் அமைச்சரவையில் சேரமாட்டார்கள் எனத் தெரிவித்திருந்த நிலையில், கட்சி உத்தரவை மீறி அமைச்சரவையில் சேர்ந்த இருவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT