Skip to main content

தமிழ்நாடு சட்டப்பேரவை இணையதளத்தில் சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பெயர் நீக்கவில்லை !

Published on 25/03/2019 | Edited on 25/03/2019

கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. கனகராஜ் அவர்கள் (22/03/2019) அன்று மாரடைப்பால் காலமானார். இதனால் தமிழக சட்டப்பேரவையில் ஏற்கெனவே உள்ள காலியிடங்கள் 21 ஆக இருந்த நிலையில் , சூலூர் சட்டமன்ற உறுப்பினர் மறைவை அடுத்து தமிழக சட்டப்பேரவை காலியிடங்கள் 22 ஆக உயர்ந்தது. இதனை தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அதிகாப்பூர்வமாக அறிவித்தார்.

 

soolur mla name removed

 

ஆனால் தமிழ்நாடு சட்டப்பேரவை இணையதளத்தில் சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் பெயர் நீக்கப்படவில்லை. இதற்கான இணையதள முகவரி :  http://www.assembly.tn.gov.in/default.htm மற்றும் http://www.assembly.tn.gov.in/15thassembly/15thassembly.html  அறியலாம். இந்நிலையில் தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன்  18 சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைப்பெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் அரவக்குறிச்சி , ஒட்டப்பிடாரம் , திருப்பரங்குன்றம் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதியின் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் தேர்தல் நடத்தவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

 

mla candidate remove list



அதனை தொடர்ந்து சமீபத்தில் உயர்நீதிமன்றம் திருப்பரங்குன்றம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் வெற்றி செல்லாது என தீர்ப்பு வழங்கியது. திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் 2018 ஆம் ஆண்டு காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி மீதான வழக்கை புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி வாபஸ் பெற்றதால் நீதிமன்றம் இது தொடர்பான வழக்கை முடித்து வைக்கத்தது. இதனால் தமிழக தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதினார். இந்த மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தலாம் என்று தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து சூலூர் சட்டமன்ற தொகுதி காலியிடமாக அறிவிக்கப்பட்ட நிலையில் ஏற்கெனவே உள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளுடன் சூலூர் சட்டமன்ற தொகுதியையும் சேர்த்து இந்திய தேர்தல் ஆணையம் மக்களவை தேர்தலுடன் தேர்தல் நடத்தப்படலாம் என தெரிக்கிறது.


பி.சந்தோஷ் , சேலம் .

சார்ந்த செய்திகள்

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிப்பு!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Notice that Vikravandi constituency is vacant

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதனால் அவர் உடனடியாக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (06.04.2024) புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மறைந்த புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று முன்தினம் (06.04.2024) விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். இதனையடுத்து புகழேந்தியின் உடல் நேற்று (07.04.2024) முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அதாவது போலீசார் வானத்தை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டு அரசு மரியாதை அளித்தனர். இதனையடுத்து சொந்த ஊரான அத்தியூர் திருவாதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றங்கரையில் புகழேந்தி உடல் தகனம் செய்யப்பட்டது. 

Notice that Vikravandi constituency is vacant

இந்நிலையில், புகழேந்தி காலமானதை அடுத்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காலியாக உள்ளதாக தமிழக சட்டப் பேரவை செயலகம் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் வரும் 19 ஆம் தேதி நடக்க உள்ள நிலையில் இடைத்தேர்தல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே தேதியில் (19.04.2024) இடைத் தேர்தல் நடத்த வாய்ப்பு குறைவாகவே உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.