ADVERTISEMENT

40 வருட இடைவெளியில் பிறந்த குழந்தைகள்... பெற்றோருக்கு அபராதம் விதிக்க திட்டமிடும் அரசு...

03:02 PM Nov 05, 2019 | kirubahar@nakk…

சீனப் பெண் ஒருவர் தனது 67 ஆவது வயதில் தனது மூன்றாவது குழந்தையை பெற்றுக்கொண்டது அந்நாட்டில் அரசியல் ரீதியாக புதிய விவாதங்களை கிளப்பியுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

சீனாவை சேர்ந்த தியான் (67) என்ற பெண் மருத்துவரும், அவரது கணவரான ஹுவாங் (68) என்ற முன்னாள் வழக்கறிஞரும் திருமணம் செய்துகொண்டு 40 ஆண்டுகளுக்கும் மேலாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் 40 வயதில் ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்த நிலையில் இந்த தம்பதி தற்போது தங்களது மூன்றாவது குழந்தையை பெற்றுள்ளனர்.

குழந்தை பிறந்த பிறகு மூத்த பிள்ளைகள் இருவரும் தாய் தந்தை வீட்டிற்கு செல்வதை நிறுத்தியுள்ளனர். மேலும் குழந்தை பிறந்த பிறகு மருத்துவமனைக்கோ அல்லது அவர்களது வீட்டிற்கோ சென்று அவர்கள் தங்களது பெற்றோரை சந்திக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த சூழலில் இந்த குழந்தையின் பிறப்பால் சீனாவில் அரசியல் ரீதியிலான விவாதம் ஒன்றும் எழுந்துள்ளது. பெய்ஜிங்கில் வசித்து வரும் இந்த தம்பதியினர், இரண்டு குழந்தைகள் மட்டுமே ஒரு தம்பதியினர் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற அங்குள்ள சட்டத்தை மீறி மூன்றாவது குழந்தை பெற்றுக்கொண்டதாக புகார் எழுந்துள்ளது.

இதற்காக அந்த தம்பதிக்கு கடுமையான அபராதத்தை விதிக்க அரசு சிந்தித்து வருகிறது. ஆனால் ஹுவாங் இதுகுறித்து கூறுகையில், 49 வயது வரையிலான பெண்களுக்கு மட்டுமே இந்த கட்டுப்பாடு பொருந்தும் என்றும் எனவே அவரது வயதான மனைவிக்கு விலக்கு அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இவ்வளவு பிரச்சனைகளிலும் இயற்கையாகவே கருத்தரிக்கப்பட்டு ஆரோக்கியமான குழந்தையைப் பெற்ற வயது முதிர்ந்த தம்பதியினர் என்ற பெயரை இவர்கள் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT