ADVERTISEMENT

“இந்தியாவில் எந்த இடத்திலும் பணியாற்ற உரிமை இருக்கிறது” - சென்னையில் சிராக் பாஸ்வான் பேட்டி

11:49 AM Mar 06, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

வடமாநிலத்தவர்கள் தாக்கப்பட்டதாகவும், கொலை செய்யப்பட்டதாகவும் போலி வீடியோக்கள் வெளியானதைத் தொடர்ந்து பீகாரைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் தமிழக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டதோடு, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டிருந்தனர். தொடர்ந்து சமூக வலைதளங்களை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் எனவும், புலம்பெயர் தொழிலாளர்களின் நலன்கள் தமிழகத்தில் காக்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்திருந்தது. காவல்துறையும் வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தது.

அதே நேரம் வடமாநிலத்தவர்கள் கணிசமான அளவில் சொந்த ஊருக்கு திரும்பி வருவதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில், பீகார் மாநிலத் தொழிலாளர்களைச் சந்திக்க லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான் தமிழகம் வந்துள்ளார். தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்களைச் சந்தித்துப் பேசும் சிராக் பாஸ்வான் பீகார் மாநிலத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு தமிழக ஆளுநரிடம் மனு அளிக்க உள்ளார்.

சென்னை பல்லாவரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சிராக் பாஸ்வான், ''சமூக வலைதளங்களில் பரவும் வீடியோக்களை வடமாநிலத் தொழிலாளர்கள் நம்ப வேண்டாம். இந்தியாவில் எந்த இடத்திலும் பணியாற்ற உரிமை இருக்கிறது. போலி செய்திகளைப் பரப்புபவர்களைக் கண்டுபிடித்து கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்திற்கும் பீகாருக்கும் இடையே உள்ள நட்புறவு நீடித்து வருகிறது'' என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT