ADVERTISEMENT

நீரில் மிதந்தபடியே யோகா!  -விருதுகளைக் குவிக்கும் விருதுநகர் சிறுமி!

04:56 PM Sep 25, 2019 | kalaimohan

‘புவியீர்ப்பு சக்தியிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ள பல வழிகள் உள்ளன. ஹடயோகம் கற்றுத்தரும் பாதை மூலம் நீரில் மிதப்பது போன்ற வித்தைகளைச் செய்யமுடியும்.’ என்றும் ‘நீரைவிட அடர்த்தி குறைவான பொருட்களே நீரில் மிதக்கும். அப்பொருட்களுக்கு அதிக அடர்த்தி இருந்தால் அவை நீரில் மூழ்கிவிடும். இறந்தவரின் உடல் நீரில் மிதப்பது ஆர்கிமிடிஸ் தத்துவத்தின் அடிப்படையிலாகும். அத்தத்துவம் என்னவென்றால், ஒரு பொருள் நீரில் மூழ்கும்போது, அதனால் வெளியேற்றப்படும் நீரின் அளவானது, அப்பொருளின் கன அளவிற்குச் சமமாக இருக்கும் என்பதே. கடலில் கப்பல் மிதப்பதை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.’ என்கிறார்கள் அறிவியலார்கள். சித்தர்களும் யோகிகளும் தண்ணீரில் நடந்தனர் என்று புராணங்களில் கூறப்படுவதாகச் சொல்கின்றனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT


மூன்றாம் வகுப்பு படிக்கும் 9 வயதே ஆன நவநீதாஸ்ரீ சித்தருமல்ல; யோகியுமல்ல. தன்னுடைய 4-வது வயதிலிருந்தே யோகா கற்று வருகிறார். ஆறு மாத நீச்சல் பயிற்சி, மூச்சுப் பயிற்சியுடன் யோகா பயிற்சியும் பெற்றிருக்கிறார். 2018-ல் ஈரோட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், நீரில் மிதந்தபடி 37 வகையான ஆசனங்களை 5 நிமிடங்கள் 56 விநாடிகளில் செய்து முடித்தார். அதன்மூலம், இந்தியா புக் ஆப் ரெகார்ட்ஸில் இடம் பெற்றிருக்கிறார்.


விருதுநகரைச் சேர்ந்த நவநீதாஸ்ரீ, அங்குள்ள தனியார் கல்லூரி நீச்சல் குளத்தில் நீரின் மேற்பரப்பில் மிதந்தும், நீருக்குள்ளும் த்ரிவிக்ரமாசனம், கூர்மாசனம், ரஜபாத தண்டையாசனம், விபத்தபட்சி மோத்தாசனம், ஜடாதித பரிவர்த்தன ஆசனம், பாதகேனாசனம் உள்ளிட்ட 37 வகை ஆசனங்களைச் செய்து காட்டினார்.


நீரில் ஆசனம் செய்தபோது மனித வடிவிலான ஒரு மீன் போலவே பார்வையாளர்களின் கண்ணுக்குத் தெரிந்தார் நவநீதாஸ்ரீ!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT