ADVERTISEMENT

இந்தியாவில் 10 லட்சம் பாலியல் தொழிலாளர் ஏன் தெரியுமா? திருச்சியில் பரபரப்பு பேட்டி

04:09 PM Jan 24, 2020 | rajavel

ADVERTISEMENT

இந்தியாவில் பாலியல் தொழில் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் குறைவாக உள்ளது. நாடு முழுவதும் 10 இலட்சம் பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர் என திருச்சி பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார் சியாப் (தென்னிந்திய எய்ட்ஸ் செயல்பாட்டு திட்டம்) அமைப்பின் நிறுவன திட்ட அலுவலர் ஜனனி.


ADVERTISEMENT


இதுகுறித்து அவர் பேசுகையில், ''இந்தியாவில் பாலியல் தொழில் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் குறைவாக உள்ளது. நாடு முழுவதும் 10 இலட்சம் பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். பாலியில் தொழில் சட்டவிரோதமான தொழில் அல்ல, சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி அமைக்கப்பட்டுள்ள குழு, சுய விருப்பத்துடன் பாலியல் தொழில் செய்வது குற்றம் ஆகாது என குறிப்பிட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி நாடு முழுவதும் 10 இலட்சம் பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர்.

இவர்களில் தமிழகம், ஆந்திரா, மற்றும் புனே நகரில் வசிக்கும் 1000 பேரிடம் ஆய்வு செய்ததில் பாலியல் தொழிலில் ஈடுபடுவர்களில் 62 சதவீதம் பேர் திருமணம் ஆன பெண்கள், குடும்ப சூழ்நிலை காரணமாக இந்த தொழில் செய்வதாக தெரிவித்தனர்.


அதிக வருமானம், குறைந்த நேரம், நினைத்த நேரத்தில் பணி ஆகிய வசதிகள் இருப்பதால் இந்த தொழிலை விரும்புவதாக தெரிவிக்கின்றனர். பெரும்பாலும் குடும்பத்திற்கு தெரியாமலே இந்த தொழிலை செய்கிறார்கள். போலிசார் கைது செய்த பின்பு ஊடகங்களில் செய்தி வெளியான பின்பு தான் குடும்பத்தினருக்கு தெரிகிறது. இதன் பிறகு அந்த பெண்கள், அவர்கள் குடும்பத்தினர், அந்த பகுதி மக்களால் ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். இதனால் பலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும்.

பொது இடங்கள் தவிர்த்து பிற இடங்களில் சுயவிருப்பத்தின் பெயரில் யாருடைய கட்டாயத்திற்கும் ஆளாகாமல் பாலியல் தொழில் பெண் ஈடுப்பட்டால் இது குற்றம் இல்லை என்று சட்டம் சொல்கிறது. பாலியல் தொழிலாளர்களை பிடித்து மறுவாழ்வு தருகிறேன் என்று சொல்லி அவர்களை இல்லங்களில் அடைத்து வைக்க கூடாது'' என்றார்.

இதே போல் வாடாமலர் எய்ட்ஸ் தடுப்பு சங்கங்களின் கூட்டமைப்பு தலைவி கோகிலா பேசும்போது, வாடகை வீடு எடுத்தோ, ''விடுதியில் வணிக நோக்கில் அதிக பெண்களை வரவழைத்து பாலியல் தொழில் ஈடுபடுபவர்களை கைது செய்வதை நாங்கள் குறையாக சொல்லவில்லை. அதே நேரம் பிழைப்புக்காக விருப்பத்தின் பெயரில் வாடிக்கையாளர்களை வரவழைத்து ஈடுபடுவோரை கைது செய்ய கூடாது'' என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT