ADVERTISEMENT

24 மணி நேர கடைத்திறப்பா ? அப்போ, தொழிலாளர் உரிமை? பெண்கள் பாதுகாப்பு? - அசத்தும் அரசாணை

01:24 PM Jun 06, 2019 | george@nakkheeran.in

தொழில்வளர்ச்சி மற்றும் வேளைவாய்ப்பை அதிகரிக்கும் விதமாக தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதிக்கும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அதில் கடைகள், தொழில் நிறுவனங்கள், உணவகம், விடுதிகள், திரையரங்குகள் ஆகியவை 365 நாட்களும் திறந்திருக்கலாம் எனவும், இந்த அரசாணை அடுத்த மாதம் (ஜூலை,2019) தொடங்கி 3 ஆண்டுகள் வரை அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும், அந்த அரசாணையில் தொழிலாளர் உரிமை மற்றும் பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக, ஒரு பணியாளரை ஒரு நாளைக்கு 8 மணி நேரம் மட்டுமே பணியில் ஈடுபடுத்த முடியும், மேற்கொண்டு அவரை வேளையில் ஈடுபடுத்த வேண்டிய அவசியம் இருக்கும் பட்சத்தில் பணியாளரின் எழுத்துப்பூர்வ அனுமதியைப் பெறவேண்டும் எனவும், பெண்களை இரவு 8 மணி வரை மட்டுமே பணியில் ஈடுபடுத்த வேண்டும், பெண்கள் இரவில் பணி செய்வதாக இருந்தால் அவர்களிடம் எழுத்துப்பூர்வ அனுமதி பெறுவதோடு, இரவு 8 மணியில் இருந்து காலை 6 மணி வரை அவர்களுக்குத் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும். என்பது போன்ற நிபந்தனைகள் இடம்பெற்றுள்ளன.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT