ADVERTISEMENT

‘துணிக்கடையில் திருடிய பெண்’...- ஆதரவாக களமிறங்கிய நெட்டிசன்கள்! 

10:45 PM Aug 31, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருப்பூரில் துணிக்கடையில் 2000 ரூபாய் நோட்டை கொடுத்து சில்லறைக் கேட்ட பெண் ஒருவர் பாவாடையை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியிருந்தது. பொன்னுலிங்கம் என்பவருக்கு சொந்தமான ஜவுளிக்கடையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த கடைக்கு நேற்று காலை சிறுவன் ஒருவனுடன் வந்த பெண் ஒருவர் 250 ரூபாய்க்குத் துணி எடுத்துள்ளார். அதற்காக 2,000 ரூபாயைக் கல்லாவில் இருந்த பெண் ஊழியரிடம் கொடுத்துள்ளார். துணிகளைப் பெற்றுக்கொண்டு சில்லறையும் வாங்கியுள்ளார். பிறகு வெளியே சென்ற அந்த பெண் மீண்டும் அதே சிறுவனுடன் கடைக்கு வந்து துணி தனக்கு வேண்டாம் என கூறியுள்ளார்.

அப்பொழுது அந்த பெண்ணுடன் வந்த சிறுவன் கடை ஊழியர்களிடம் பேசும் பொழுது மேஜையில் இருந்த பாவாடையை எடுத்து புடவையில் மறைத்துக் கொண்டு வெளியே சென்றார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இது தொடர்பான செய்திகள் சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், அடிப்படைத் தேவைக்கு திருடுபவர்களுக்கும் தேவைக்கு அதிகமாக திருடுபவர்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது; இதற்கு எல்லாம் எதற்கு சிசிடிவி கேமரா இருக்கு ஆனால் கோடி கணக்கில் கொள்ளையடிக்கும் ஊழல் அரசியல்வாதிகளின் வீடியோ வெளியே வராது என்பது போன்ற கருத்துக்களை அந்த பெண்ணுக்கு ஆதரவாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT