ADVERTISEMENT

உழவர் பாதுகாப்பு திட்டத்தில் கோடிக்கணக்கில் மோசடி; பெண் ஊழியர் கைது         

06:20 PM Sep 02, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

அகிலா

ADVERTISEMENT

திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒரு பிரிவாக இயங்கி வருகிறது சமூக நலத்துறை வட்டாட்சியர் அலுவலகம். இந்த அலுவலகத்தில் கணினி ஆபரேட்டராக 2012 ஆம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளுக்கு மேலாக தற்காலிக பணியாளராக வேலை செய்து வந்துள்ளார் அதே ஊரைச் சேர்ந்த அகிலா. இவர் சுமார் ரூ. 6.75 கோடி பணத்தை கணினி மூலம் மோசடி செய்து அவரது கணவர் வினோத், தாயார் விஜயா, சித்தப்பா மணிவண்ணன், உறவினர்கள் பாலகிருஷ்ணன் உட்பட சுமார் ஏழு பேர் வங்கி கணக்குகளுக்கு பணப்பரிமாற்றம் செய்துள்ளதாக கண்டறியப்பட்டு அகிலா உட்பட ஐந்து பேர் கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து விசாரித்த போது திட்டக்குடி வட்டம் எறையூர் கிராமத்தைச் சேர்ந்த சக்கரவர்த்தி என்பவர் மனைவி பத்மினி மற்றும் பெண்ணாடத்தை சேர்ந்த மணி என்பவரது மனைவி தேவகி, இவர்கள் அவரவரின் கணவர் இறந்து போனதால் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இயற்கை மரணத்திற்கான நிவாரணத் தொகை வழங்குமாறு விண்ணப்பித்திருந்தனர். இவர்களது விண்ணப்பம் சுமார் ஆறு மாதத்திற்கு மேல் ஆகியும் அவர்களது விண்ணப்பங்கள் முறையாக பரிசீலனை செய்து நிவாரணம் வழங்கப்படவில்லை. இது குறித்து அந்தப் பெண்கள் இருவரும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க, அது குறித்து மாவட்ட ஆட்சியர் கடலூர் கோட்டாட்சியர் கவியரசு அவர்களை விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து கடலூர் கோட்டாட்சியர் தலைமையில் நடத்தப்பட்ட விசாரணையில் மேற்படி இரண்டு பெண்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. இருந்தும் பத்மினி மற்றும் தேவகி ஆகியோரின் ஆதார் எண் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்தனர். அதில் மேற்படி இரு நபர்களும் நான்கு மாதங்களுக்கு முன்னரே அவர்களுக்கான உதவித்தொகை அனுப்பப்பட்டுள்ளது என்று பதிவு செய்யப்பட்டிருந்தது. மேலும் இது குறித்து கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் உழவர் பாதுகாப்பு திட்டத்திற்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்ட பட்டியல்களையும் ஆராய்ந்து பார்த்தனர், கடலூர் மாவட்ட கருவூல அலுவலர்களிடம் இருந்து பெறப்பட்ட ஆவணங்களையும் பரிசீலனை செய்ததில் விண்ணப்பதாரர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை அவர்களுக்கு வழங்க வேண்டிய உதவித்தொகைகளை பயனாளிகள் அல்லாத வேறு நபர்களின் வங்கிக் கணக்கிற்கு நிவாரணத் தொகை அனுப்பப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

இது குறித்து விசாரணை நடத்தியதில் கணினி ஆபரேட்டர் அகிலா பயனாளிகளுக்கு அரசால் வழங்கப்படும் தொகையில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது போக மீதி இருக்கும் தொகைகளை அவரது வங்கி கணக்கு மற்றும் அவர் தாய் கணவர் சித்தப்பா மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட ஏழு பேர் வங்கி கணக்குகளுக்கு அந்த பணத்தை அனுப்பி மோசடி செய்துள்ளார். மேலும் அவ்வப்போது முதியோர், விதவை, மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு மாதந்தோறும் வங்கிக்கு அனுப்பப்படும் உதவித்தொகை பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் பெயருக்கு பணம் அனுப்பாமல் அந்தப் பணத்தை தனக்கு வேண்டப்பட்டவர்கள் வங்கிக் கணக்கிற்கு அவ்வப்போது அனுப்பி சுமார் 6 கோடியே 75 லட்ச ரூபாய் மோசடி செய்துள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பணப்பரிவர்த்தனையில் அகிலா மோசடி செய்துள்ளார் என்பதும், மேலும் இதில் உழவர் பாதுகாப்பு திட்டம் முதியோர் உதவித்தொகை ஆகிய பட்டியல்களை ஆய்வு செய்வதில் மேற்படி நபர்களின் வங்கிக் கணக்கிற்கு அகிலா மூலம் பணப்பரிமாற்றம் செய்வது உறுதியாக கண்டறியப்பட்டது. இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மோசடியில் சம்பந்தப்பட்ட அகிலா, அவர் தாயார் விஜயா, சித்தப்பா மணிவண்ணன் மற்றும் கணவர் வினோத் குமார் உறவினர்கள் செல்வராஜ், வளர்மதி, முத்துசாமி, விஜயன் ஆகியோர் பெயருக்கு பல வங்கிகளில் அந்த வங்கி கணக்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றிய அகிலாவை கைது செய்து அழைத்து சென்றனர். மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் அகிலாவின் குடும்பத்தினரையும் விசாரணைக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் திட்டக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT