ADVERTISEMENT

அதிமுக மகளிர் அணி செயலாளர் மீது புகார் அளித்த பெண்!

03:57 PM Jul 09, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தென்காசி மாவட்ட அதிமுக மகளிர் அணிச் செயலாளராக உள்ளவர் சொர்ணா. இவர் மீது மோசடி புகார் கொடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் நகரில் உள்ள மகாராஜாபுரத்தைச் சேர்ந்தவர் செந்தமிழ்ச்செல்வன். இவரது மனைவி மலர்மகள், விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள ஏ.டி.எஸ்பி அலுவலகத்திற்குச் சென்று ஒரு புகார் மனு அளித்துள்ளார். அந்தப் புகாரில், அவரது கணவர் செந்தமிழ்ச்செல்வன் ஆசிரியராகப் பணிபுரிந்துவருவதாகவும் இவர்களது மகன் பொறியியல் பட்டம் படித்துள்ளார்.

அவருக்கு நெய்வேலி என்.எல்.சி தலைமை நிறுவனத்தில் பொறியாளராக வேலை வாங்கித் தருவதாக தென்காசி மாவட்ட அதிமுக மகளிர் அணிச் செயலாளர் சொர்ணா கூறியுள்ளார். அதை நம்பி திண்டிவனம் அதிமுக பிரமுகர் ஐயப்பன் என்பவரை அழைத்துச் சென்ற மலர்மகள், அவரது கணவர் செந்தமிழ்ச்செல்வன் ஆகியோர் 2019 அக்டோபர் 10ஆம் தேதி 11 லட்ச ரூபாயை சொர்ணாவிடம் நேரடியாக கொடுத்தோம். இதேபோன்று தங்களது உறவினரின் மகனுக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அலுவலக உதவியாளர் வேலை வாங்கித் தருவதாக கூறியதையடுத்து அதற்காக தனியாக ஒன்பது லட்ச ரூபாய் பணத்தை சொர்ணாவினுடைய கணவர் ஜெயப்பிரகாஷிடம் கொடுத்ததாகவும், இருவருக்கும் இரண்டு மாதங்களில் மேற்படி வேலை வாங்கித் தருவதாக உறுதி அளித்தவர்கள் அதன்பிறகு வேலை வாங்கித் தரவில்லை.

பணத்தையும் திருப்பித் தரவில்லை. காலம் கடந்ததால் அவ்வப்போது சென்று நாங்கள் கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டுவந்தோம். அதன் பிறகு கடந்த 2020 ஆகஸ்ட் 16ஆம் தேதி 3 லட்சமும் 17ஆம் தேதி 5 லட்சமும் எனது வங்கிக் கணக்கிற்கு அனுப்பினார்கள். இன்னும் மீதி தர வேண்டிய தொகை 12 லட்ச ரூபாயைத் திருப்பித் தராமல் ஏமாற்றிவருகின்றனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை பெற்றுத் தர வேண்டும் என்று அந்தப் புகாரில் கூறியுள்ளார். மலர்மகள் தென்காசி மாவட்ட அதிமுக மகளிர் அணிச் செயலாளர் மீது மோசடி புகார் கொடுத்துள்ளது குறித்து விழுப்புரம் காவல்துறை தீவிர விசாரணை நடத்திவருகிறது. அதிமுக மாவட்ட மகளிரணிச் செயலாளர் மீது அளிக்கப்பட்ட பண மோசடி புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT