ADVERTISEMENT

கல்லூரிகளை தாமதமாக திறக்க உச்சநீதிமன்றம் அனுமதிக்குமா? - காத்திருக்கும் தமிழக கல்வித்துறை!

12:17 PM Jul 05, 2018 | Anonymous (not verified)

தமிழகத்தில் உள்ள 509 பொறியியல் கல்லூரியில் மாணவ - மாணவிகள் சேருவதற்கான கலந்தாய்வுக்கான விண்ணப்பத்தினை அண்ணா பல்கலைகழகம் வெளியிட்டது. 1,59,631 விண்ணப்பங்கள் வந்துயிருந்தன. அதில் தகுதியான விண்ணப்பங்களுக்கு ரேண்டம் என் ஒதுக்கப்பட்டது.

அவர்களுக்கு கடந்த மாதம் சான்றிதழ் சரிப்பார்ப்பு ஒவ்வொரு மாவட்டத்திலும் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தியது. இந்த சான்றிதழ் சரிபார்ப்புக்கு 49,781 பேர் வரவில்லை. மற்றவை ஏற்றுக்கொள்ளப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT


சான்றிதழ் சரிபார்ப்புக்கு வந்தவர்களில் 5397 பேர் சரியான சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை. அவர்கள் ஜீன் 4ந்தேதி மாலை 5 மணிக்குள் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்திற்க்கு நோடியாக வந்து சமர்பிக்க வேண்டும் என்றது. அதன்படி சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்து மீண்டும் சான்றிதழ்களை சரியாக தந்துவிட்டு சென்றுள்ளனர் என தெரிகிறது.

சான்றிதழ் சரிபார்ப்பு தேதி நேற்றோடு முடிந்துவிட்டதால் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வுக்கான தேதி இன்று அல்லது நாளை என எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்கிற தகவல் அண்ணா பல்கலைகழகம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.


மருத்துவ படிப்புக்கான முதல் கட்ட கலந்தாய்வு வரும் ஜீன் 10ந் தேதியோடு முடிவடைகிறது. அந்த கலந்தாய்வை கருத்தில் கொண்டு பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துயிருந்தார்.

ஆகஸ்ட் 1ந்தேதி பொறியியல் கல்லூரிகள் திறக்கப்பட வேண்டும் என ஏற்கனவே ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டு கலந்தாய்வு தாமதமாவதால் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து ஆகஸ்ட் 20 தேதிக்கு பின் திறக்க அனுமதி பெறவுள்ளது தமிழக உயர்கல்வித்துறை. கடந்த ஆண்டும் இதேப்போல் அனுமதி வாங்கியது என்பது குறிப்பிடதக்கது.

​முதன் முறையாக அண்ணா பல்கலைக்கழகம் ஆன்லைன் மூலம் இந்த கலந்தாய்வை நடத்துகிறது. இதன் மூலம் யாரும் சென்னை செல்ல வேண்டியதில்லை. விண்ணப்பித்தவர்கள் இருக்கும் இடத்தில் இருந்தே தங்களுக்கான கல்லூரி, பாடப்பிரிவை தேர்வு செய்துக்கொள்ள முடியும். இணைய வசதியில்லாதவர்கள், தேர்வு செய்ய தெரியாதவர்களுக்காக மாவட்டத்துக்கு ஒருயிடத்தில் என சேவை மையத்தையும் திறந்துள்ளது பல்கலைக்கழக நிர்வாகம் என்பது குறிப்பிடதக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT