ADVERTISEMENT

தேனியில் காட்டுத்தீ! நடவடிக்கை எடுக்குமா வனத்துறை ?

10:31 AM Jun 14, 2019 | kalaimohan

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. ஏப்ரல் மே மாதங்களில் காட்டில் சில இடங்களில் தீப்பற்றி எரிவது வழக்கமாக இருந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதலே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் காட்டுத் தீ பற்றி எரியத் தொடங்கியுள்ளது. அகமலை வனப்பகுதியில் காட்டுத் தீயானது அதிக அளவில் பற்றி எரிவதால் விலை உயர்ந்த மரங்களும், அரிய வகை மூலிகை செடிகளும் தீயில் எரிந்து கருகி நாசமாகி வருகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

வனவிலங்குகள் பெரும் பாதிப்பை சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் சரியாக நடவடிக்கை இல்லை எனக் கூறப்படுகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT