
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை வனப் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியானது. கும்பக்கரை, செழும்பாறு வனப் பகுதியில் புலிகள் சாலையைக்கடப்பது போன்ற வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியதால்அந்தப் பகுதி மக்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருந்தது.
இந்நிலையில் தமிழக வனத்துறை இது தொடர்பாக விளக்கம் ஒன்றைக் கொடுத்துள்ளது. தேவதானப்பட்டி வனச்சரகஅதிகாரி டேவிட்ராஜ் கொடுத்துள்ள விளக்கத்தில், “மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் புலி அறவே இல்லை. கும்பக்கரை வனச்சரக பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதாகச் சமூக வலைத்தளங்களில் பொய் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்”என அவர் எச்சரித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)