ADVERTISEMENT

குரங்கனியில் மீண்டும் ஒரு காட்டுத்தீ! பீதியில் மலைமக்கள்

05:11 PM Jul 29, 2018 | vasanthbalakrishnan

துணை முதல்வர் ஒபிஎஸ் தொகுதியான போடி தொகுயில் உள்ளது குரங்கனி. இந்த குரங்கனியில்தான் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சென்னை, திருப்பூர் போன்ற பகுதிகளில் இருந்து நடை பெயர்ச்சிக்கு வந்த 40க்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குரங்கனியிலிருந்து வனப்பகுதி வழியாக தனியார் தேயிலை தோட்டம் வரை சென்று விட்டு திரும்ப மறு நாள் காலையில் திரும்பவும் நடைபயிற்சியோடு வனப்பகுதியில் உள்ள ஒத்த மரம் அருகே வரும் போது திடீரென பரவி வந்த காட்டுத் தீ அந்த சுற்றுலா பயணிகள் மீது பரவியதால் உயிருக்கு பயந்த அந்த சுற்றுலா பயணிகள் அருகே இருந்த பள்ளத்தில் ஒருவர் மீது ஒருவராக விழுந்தனர் ஆனால் அந்த பள்ளத்திலும் காட்டு தீ பரவி இருந்ததால் அந்த பள்ளத்தில் விழுந்த சுற்றுலா பயணிகளில் பத்து பேர் சம்பவ இடத்திலையே தீ க்கு பலியானர்கள் 22 பேர் அந்த காட்டு தீயால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மதுரையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் சேர்த்து தீவிர சிகிச்சைகள் செய்தும் கூட 19 பேர் இறந்தனர். ஏற்கனவே பத்து பேர் இறந்ததும் மொத்தம் சேர்த்து 29 பேர் அந்த காட்டு தீயில் கருகி இறந்தது தமிழகத்தையே சோகத்தில் மூழ்கியது. அதன் அடிப்படையில் இந்த எடப்பாடி அரசும் கூட விசாரணை கமிஷன் வைத்து விசாரணை அறிக்கையையும் தாக்கல் செய்தும் கூட இன்னும் எடப்பாடி அரசு அதன் அறிக்கையை வெளியிட வில்லை.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்த நிலையில் தான் போடியிலிருந்து பரமசிவன் கோவில் பின்புறமாக போடி மேட்டுக்கு செல்லும் கழுதை பாதை வனப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக காட்டு தீ பரவி எரிந்து வருகிறது. அப்படி இருந்தும் கூட வனத்துறையினர் கண்டுகொள்ளவில்லை. அதுனால் அந்த காட்டுதீ தொடர்ந்து குரங்கனி வனப்பகுதிகளிலும் எரிய தொடங்கி இருப்பது அப்பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுபோல் கூலி வேலைக்கு செல்பவர்கள் மற்றும் மலைகிராமங்களுக்கும் இவ்வழியாகதான் பலர் போய்வருகிறார்கள் அதனால் திடீரென காட்டுதீ பரவி வருவதை கண்டு இன்னொரு குரங்கனி தீவிபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்திலையே அப்பகுதி மக்கள் இருந்துவருகிறார்கள்எனவே வனத்துறையும் இனி மெத்தனபோக்கை தவிர்த்துவிட்டு வனப்பகுதியில் பரவிவரும் காட்டுதீயை உடனடியாக அணைக்க முன்வரவேண்டும் என்பதுதான் தொகுதிமக்களின் விருப்பமாக இருந்து வருகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT