ADVERTISEMENT

முதல்வரை பார்க்க ஒரு மணிநேரம் காத்திருந்தும் அனுமதி மறுப்பு ஏன்?-அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி கேள்வி

06:42 PM Oct 22, 2020 | kalaimohan

ADVERTISEMENT

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று புதுக்கோட்டையில் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டார். இந்நிலையில் புதுக்கோட்டையில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திப்பதற்காக சென்ற அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி, தான் தடுத்து நிறுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இன்று ஆய்வுக்காக வந்த முதல்வரை சந்திக்க சென்ற போது அதிகாரிகள் தடுத்ததாக தெரிவித்துள்ள அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி, அதேபோல் ஆய்வு பணிகளை முடித்துக்கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விமான நிலையத்திற்கு சென்ற பொழுது இரண்டாவது முறையாக மாலையும் அவரை சந்திக்க முயன்ற பொழுதும் தான் வெளியே ஒரு மணி நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். மக்கள் பிரச்சினை பற்றி பேச சந்திக்க விரும்பவில்லை. எங்கள் மாவட்டத்திற்கு விருந்தினராக வந்த முதல்வரை வரவேற்று வழியனுப்பி வைப்பதற்காகவே அவரை சந்திக்க முயன்று காத்திருந்தேன் அதற்கும் கூட எனக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது ஏன் என்று தெரியவில்லை என தெரிவித்துள்ளார். அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி அமமுக விலிருந்து பிரிந்து அதிமுகவில் சேர்ந்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT