ADVERTISEMENT

''நாமும் ஏன் அப்படி செய்யக்கூடாது'' - பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

11:47 AM Jul 13, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரோனா இரண்டாம் அலை காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில், கரோனா தாக்கம் தற்போது குறைந்துள்ளதால் பள்ளி மற்றும் கல்லூரிகளைத் திறக்க புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி முடிவெடுத்துள்ளார்.

முதற்கட்டமாக பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையும், கல்லூரிகளும் வரும் 16ஆம் தேதி திறக்கப்பட இருக்கின்றன. துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை நேரில் சந்தித்த பின் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இதற்கான முறையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்னர் வெளியாகும் என்ற தகவலும் வெளியாகியிருந்தது. இந்நிலையில், தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசனை நடைபெற்றுவருவதாக தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், “புதுச்சேரியில் வரும் 16ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக செய்தி வந்தது. காலையிலேயே துறையைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. நாமும் ஏன் அப்படி செய்யக்கூடாது என்ற அளவில்தான் அந்த ஆலோசனை இருந்தது. கண்டிப்பாக பாண்டிசேரி எப்படி பள்ளிகளைத் திறக்க முயற்சி எடுத்துள்ளதோ, அதுபோல் நமது துறையைச் சேர்ந்தவர்கள் என்ன கருத்து சொல்கிறார்களோ அதையெல்லாம் முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்வோம். இன்றைய கரோனா நிலவரத்தைக் கருத்தில்கொண்டு முதல்வர் என்ன முடிவெடுக்கிறாரோ அதைப் பின்பற்றுவோம்” என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT