ADVERTISEMENT

சின்னத்தம்பியை ஏன் காட்டுக்குள் அனுப்பக்கூடாது?- நீதிமன்றம் கருத்து

11:04 AM Feb 12, 2019 | kalaimohan

ADVERTISEMENT

கோவை டாப்ஸ்லிப் பகுதியில் விடப்பட்ட காட்டு யானை சின்னத்தம்பி 100 கிலோ மீட்டர் நடந்து வந்து உடுமலைபேட்டை பகுதிகளில் தொடர்ந்து முகாமிட்டு சுற்றி வருகிறது. இந்நிலையில் சின்னத்தம்பியை கும்கியாக மாற்றலாம் என்ற வனத்துறை எடுத்த முடிவுக்கு எதிர்ப்புகள் கிளம்ப மீண்டும் சின்னத்தம்பியை காட்டுக்குள் அனுப்ப முயற்சித்தது வனத்துறை.

ADVERTISEMENT

ஆனால் முயற்சிகள் தோல்வியில் முடிந்தது இந்நிலையில் சின்னத்தம்பி யானையை முகாமிற்கு அனுப்புவதை தவிர வேறு வழியில்லை என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் சின்னதம்பியை ஏன் காட்டுக்குள் அனுப்பக்கூடாது என கருத்து தெரிவித்த உயர்நீதிமன்றம், சின்னத்தம்பியை முகாமுக்கு அனுப்புவது தொடர்பான அறிக்கையை நாளை சமர்ப்பிக்க வேண்டும் என கூறி வழக்கை ஒத்திவைத்தது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT