
கோவில் யானைகளைப் பெரிய அளவிலான பகுதியில், இயற்கைச் சூழலில் வைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்குப் பதிலளிக்கும்படி, தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாட்டில் 34 கோவில் யானைகள் உள்ளதாக கூறியுள்ளார். மதுரை அழகர் கோவில், சேலம் சுகவனேஸ்வரர் கோவில் மற்றும் பவானி சங்கமேஸ்வரர் கோவில் யானைகள், அதிகாரிகளின் கவனக்குறைவால் பலியாகியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
கோவில் யானைகள் சிறிய இடத்தில் அடைத்துவைக்கப்பட்டிருப்பதாலும், சிமெண்ட் தரையில் அடைக்கப்பட்டிருப்பதாலும்கால்களில் தொற்று பாதித்து அவை பலியாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதனால், கோவில் யானைகளைப் பெரிய அளவிலான இடத்தில், இயற்கைச் சூழலில் வைக்க வேண்டும் எனவும், அவற்றுடன் பெண் யானையும் உடனிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)