ADVERTISEMENT

அன்று ஏன் ஜானகி ஆட்சியை கலைத்தீர்கள்- தங்கத்தமிழ்செல்வன்

11:06 AM May 08, 2019 | kalaimohan

ADVERTISEMENT

நேற்று தேனியில் செய்தியாளர் சந்திப்பில் தங்கத்தமிழ்செல்வன் இந்த தேர்தலை அதிமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்பும் தேர்தலாக பார்க்கிறோம். திமுகவும் நாங்களும் சேர்ந்தால் தான் இந்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப முடியும் என கூறியது தொடர்பாக பல்வேறு விவாதங்கள் ஏற்பட்ட நிலையில்,

ADVERTISEMENT

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக முக்கிய நிர்வாகியும், தேனி அமமுக நாடாளுமன்ற வேட்பாளருமான தங்கத்தமிழ்செல்வன் பேசுகையில்,

எம்ஜிஆர் ஆட்சி எம்ஜிஆர் ஆட்சி என்று சொன்னீர்களே ஏன் ஜானகி ஆட்சியை கலைத்தீர்கள். ஜெ நல்லவர், ஜானகி ஆட்சியில் இருப்பவர்கள் நல்லவர்கள் அல்ல எனவே அந்த ஆட்சியை கலைத்துவிட்டு ஜெ.வை கொண்டுவரத்தான் அவரை அமரவைத்தோம், உண்மைதானே.

இன்றைக்கு அதிமுக ஆட்சி, அம்மா ஆட்சி என சும்மா சொல்கிறீர்கள். ஊழல் ஆட்சிதான் நடக்கிறது. துரோகிகள் ஆட்சி நடக்கிறது. டிடிவி தினகரனை முதல்வராக்க இந்த ஆட்சியை கலைப்போம்.

கலைப்பது தப்பில்லையே? இந்த இடைத்தேர்தலில் 22 சீட்டு வென்றோம் என்றால் நாளைக்கு எடப்பாடி நம்பிக்கை கோரும் தீர்மானம் கவனரிடம் கொடுக்க வேண்டும். அப்போது நாங்க அதிமுகவுக்கு எதிராகத்தான் ஓட்டு போடுவோம். திமுகவும் அதிமுகவிற்கு எதிராக ஓட்டுப்போடும்,காங்கிரசும் எதிராக தானே ஓட்டு போடும், முஸ்லீம் லீக்கும் எதிராக தானே ஓட்டுப்போடும் அப்போ நாங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்துவிட்டோம் என்று அர்த்தமா? பிறகு ஏன் நான் சொன்னது தவறு என்று சொல்கிறீர்கள் என வினவினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT