ADVERTISEMENT

பிரபந்தம் பாடுவது யார்?- வடகலை தென்கலை மோதல்

10:37 AM Nov 19, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

காஞ்சிபுரத்தில் வடகலை தென்கலை பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் விளக்கொளி கோவில் தெருவில் வேதாந்த தேசிகருக்கு கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலில் இருந்து வரதராஜ பெருமாள் கோவில் வழியாக வேதாந்த தேசிகர் வீதி உலா வரும் நிகழ்ச்சி இன்று நடைபெற இருந்தது. இந்நிலையில் இன்று வேதாந்த தேசிகர் வீதி உலாவின் போது வரதராஜ பெருமாள் கோவில் அருகே இருந்த வடகலை தென்கலை பிரிவினர் பிரபந்தம் பாடுவதற்கு குவிந்தனர்.

தென்கலை பிரிவினர் பிரபந்தம் பாடுவதற்கு நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதாக கூறிய வடகலை பிரிவினர், வேதாந்த தேசிகர் முன்பு பிரபந்தம் பாட எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற விஷ்ணுகாஞ்சி போலீசார் இருதரப்பையும் சமாதானப்படுத்த முயன்றனர்.

உடனடியாக அங்கு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் வந்தனர். தென்கலை பிரிவினர் வரதராஜ பெருமாள் கோவிலில் மட்டுமே பாடுவதற்கு தடை வழக்கு உள்ளதாகவும் வெளிப்பகுதியில் பாடுவதற்கு தடை இல்லை என தென்கலை பிரிவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து இரு தரப்பினரையும் பிரபந்தம் பாடுவதற்கு காவல்துறையினர் அனுமதி அளித்த பின்பு, போலீசாரின் பாதுகாப்போடு சாமி வீதி உலா நடைபெற்றது. வடகலை தென்கலை பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட இந்த மோதல் அங்கு சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT