Skip to main content

பாதுகாப்புப் பணியில் 2000 போலீசார்; மதுராந்தகத்தில் பள்ளிக் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

Published on 19/10/2023 | Edited on 19/10/2023

 

2000 policemen on security duty in Melmaruvathur

 

ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி குருவாக இருந்து வந்த மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் காலமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி தியான பீடம் ஒன்றை உருவாக்கி புகழ் பெற்றவர் பங்காரு அடிகளார். வயது 82. இந்நிலையில், மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவரது பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாளை அவரது உடலுக்கு இறுதிச் சடங்கு நிகழ்வுகள் நடக்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் தமிழக முதல்வர், அவரின் இறுதிச் சடங்கு நிகழ்வுகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் என அறிவித்துள்ளார். இந்நிலையில் மேல்மருவத்தூர் பகுதியில் 6 மாவட்ட எஸ்பிக்கள் மற்றும் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். இது குறித்த அறிவிப்பை செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி சாய் பிரனித் தெரிவித்துள்ளார். இன்று மற்றும் இறுதிச் சடங்கு நடைபெறும் நாளான நாளை ஆகிய  2 நாட்கள் 2000 போலீசார் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்காரு அடிகளார் மறைவை ஒட்டி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகக் கோட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்