ADVERTISEMENT

  எந்த சினிமா கோவலனை கெடுத்தது? - டி.ஆர். ஆவேசம்

06:26 PM Jul 10, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

புதிதாக தயாரிக்கப்பட்டு வரும் சர்க்கார் படத்தில் விஜய் சிகரெட் பிடிப்பது போன்ற போஸ்டர் வெளியானது. முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் இதற்கு கண்டனம் தெரிவித்தார். தம் அடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று தன்னிடம் அளித்த உறுதியை மீறிவிட்டார் விஜய் என்று அவர் கூறியது கடும் விவாதத்திற்கு உள்ளானது.

ADVERTISEMENT

இதையடுத்து, 'சர்ச்சைக்குரிய போஸ்டரை நீக்காவிட்டால் சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்று தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்தது. தமிழக அரசின் எதிர்ப்பை அடுத்து, விஜய் புகைபிடிப்பது போன்ற `சர்கார்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய்யின் ட்விட்டர் பக்கம் மற்றும் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸின் ட்விட்டர் பக்கங்களிலிருந்து நீக்கப்பட்டது. மேலும், இந்த போஸ்டருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில், இயக்குநர் டி.ராஜேந்தர் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது இந்த விவகாரம் குறித்து பேசினார். அவர், ‘’சினிமாவில் ஒரு நடிகன் செய்வதை ரசிகர்களும் செய்வார்களா? சினிமாக்காரன் தம் அடிப்பதை பார்த்துதான் மக்கள் தம் அடிக்கிறாங்க என்று சொன்னால் என்னய்யா இது அநியாயம்?

சினிமாவை பார்த்துதான் எல்லோரும் கெட்டுப்போறாங்க என்று சொல்லுறாங்க. அப்படிப்பார்த்தால் சினிமாவே வராத காலத்தில் நடந்துக்கெல்லாம் எது காரணம்? கண்ணகியை விட்டு மாதவியை தேடிப்போனான் கோவலன். எந்த சினிமா கோவலனை கெடுத்தது? சமுதாயத்தின் சம்பவங்களைத்தான் சினிமா ரிப்ளக்ட் பண்ணுகிறது. சினிமாவில் உள்ளதை வைத்து சமுதாயம் நடக்கவில்லை’’ என்று ஆவேசமாக பேசினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT