ADVERTISEMENT

நள்ளிரவில் வீடு புகுந்து இழுத்துச்சென்ற மக்கள் அதிகாரம் தோழர்கள் 6 பேர் எங்கே?

09:43 PM May 27, 2018 | Anonymous (not verified)


உசிலை 1.கோட்டையன் வ / 40 , த / பெ சின்னன், கோவில்பட்டி 2.சரவணன் வ , 32 த / பெ பண்டாரம் , ஆலங்குளம் – பாப்பாக்குடி காவல் நிலையம் 3.முருகன் வ / 40, த / பெ செல்லத்துரை, திருநெல்வேலி காவல் நிலையம் 4.கலியலூர் ரஹ்மான் வ / 50, த / பெ கலீல், 5.முகமது அனஸ் வ/ 20 , த / பெ கலியலூர் ரஹ்மான் 6. முகமது இர்ஷத் வ /18 , த / பெ கலியலூர் ரஹ்மான் ஆகியோரை 25-ந்தேதி நள்ளிரவில் வீடு புகுந்து போலீசு இழுத்துச் சென்றது. கைது செய்யும் போலீசார் எந்த காவல் நிலையத்தை சேர்ந்தவர்கள் என்பதையோ, என்ன வழக்கிற்காக கைது செய்கிறார்கள் என்பதையோ, எங்கு கொண்டு செல்கிறார்கள் என்பதையோ குடும்பத்தினருக்கு தெரிவிக்கவோ இல்லை.

ADVERTISEMENT

உள்ளூர் காவல் நிலையத்தில் விசாரித்த போது தமக்கு ஏதும் தெரியாது என்று கை விரிக்கின்றனர். தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டில் கொத்து கொத்தாக மக்களை கொன்று, வன்முறை தீ வைப்பை நடத்திவிட்டு தங்களது குற்றத்தில் இருந்து தப்பிப்பதற்கு எமது அமைப்புக்கு எதிராக பொய்களையும், புனை சுருட்டுக்களையும் உளவுத்துறை பரப்பி வருகிறது.

ADVERTISEMENT

கைது செய்யப்பட்டால் முறையாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்பதும் 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்பதும் சட்ட நடமுறையாகும். கடந்த 48 மணி நேரமாக இவர்களை காணவில்லை என்பதால் இந்த தோழர்களுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று அஞ்சுகிறோம். தூத்துக்குடி மக்கள் போராட்டத்தை ஆதரிக்கின்ற அனைவரும் மக்கள் அதிகாரம் அமைப்புக்கும், எமது தோழர்களுக்கும் எதிராக போலீசு தொடுத்திருக்கும் இந்த தாக்குதலுக்கு எதிராகவும், இவர்களை விடுவிக்க கோரியும் குரல்கொடுக்க வேண்டும் என்று கோருகிறோம். இந்த 6 தோழர்களின் கடத்தலுக்கு எதிராக நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்ய இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.ராஜூ.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT