ADVERTISEMENT

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்! 

11:33 AM Nov 29, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாடு முதல்வர் இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக வசிக்கும் முகாம்களில் உள்ள அனைவருக்கும் அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்வதாக உறுதி அளித்திருந்தார்.

அவர்களுக்குத் தேவையான நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கென தனியாக நிதி ஒதுக்கி, தற்போது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முகாம்களிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது.

அதன் ஒரு பகுதியாக இன்று (29.11.2021) திருச்சி கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் 469 இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்குப் பாத்திரம், துணிமணிகள், இலவச எரிவாயு இணைப்பு ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், முகாம்களுக்குள் உள்ள சுய உதவிக் குழுவுக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் காசோலை வழங்கப்பட்டது.

இந்த நலத்திட்ட உதவிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு, சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், எம். பழனியாண்டி, சீ. கதிரவன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT