ADMK has reached the dream of half a century! Will it retain it?

Advertisment

நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சியில் மொத்தமுள்ள 27 இடங்களில், திமுக 11, அதிமுக 11, சுயேட்சை வேட்பாளர்கள் 5 பேர் வெற்றி பெற்றிருந்தனர். சுயேட்சைகள் திமுகவுக்கு ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து திமுகவின் பலம் 16 ஆக உயர்ந்தது. இருப்பினும் மணப்பாறை நகரமன்றத் தலைவர் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று அதிர்ச்சியை கொடுத்தது.

ADMK has reached the dream of half a century! Will it retain it?

இந்த நிலையில் தற்போது 1வது வார்டு அதிமுக உறுப்பினர் செல்லம்மாள் மற்றும் 13-வது வார்டு உறுப்பினர் வாணி ஆகியோர் திமுகவில் இணைந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தனர். மணப்பாறை நகரமன்றத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்தவர் இருக்கும் நிலையில், அதிமுக கவுன்சிலர்கள் இரண்டு பேர் திமுகவில் இணைந்தது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. நகர்மன்றத்தை 53 வருடங்களுக்குப் பிறகு கைப்பற்றியுள்ள அதிமுக அதைத் தக்கவைத்துக் கொள்ளுமா என்பதும் கேள்விக்குறியாக மாறியுள்ளது.