ADVERTISEMENT

தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு

01:21 PM Mar 20, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் இரண்டு மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் இன்றும், நாளையும் அந்தமான் நிக்கோபர் பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு அதித கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் அங்கு ரெட் அலெர்ட் விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், சில இடங்களில் மழைபொழிவுக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT