ADVERTISEMENT

"மும்மொழிக் கொள்கையைக் கடுமையாக எதிர்க்கிறோம்" -தி.மு.க. ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்!

06:49 PM Jul 30, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதேபோல் தமிழக அரசு அறிவித்திருந்த பொதுமுடக்கம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று (30/07/2020) மாலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உடன் காணொளி மூலம் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை கடைப்பிடிக்கப்படும் என அ.தி.மு.க. தீர்மானமாக அறிவிக்க வேண்டும். புதிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் எனவும் அ.தி.மு.க. அரசு தீர்மானமாக அறிவிக்க வேண்டும். மும்மொழிக் கொள்கையை ஆணித்தரமாகவும், கடுமையாகவும் எதிர்த்து நிராகரிக்கின்றோம். மழலையர் கல்வியைக் கூட மத்திய அரசு முடிவு செய்யும் என்பது தி.மு.க.வின் பரிந்துரைகளுக்கு எதிராக உள்ளது. பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் சேர்க்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT