ADVERTISEMENT

நாங்கள் கேட்டது புதிய பேருந்து நிலையம், திறப்பதோ டாஸ்மாக்!

05:02 PM Jul 13, 2018 | Anonymous (not verified)

மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்தையொட்டியே பொதுமக்களுக்கு இடையூறாக டாஸ்மாக் மதுபானகடையை திறக்க கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. அதனை உடனடியாக தடை செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சி, சிஐடியூ, சிறு விற்பனையாளர்கள் சங்கத்தினர் கடந்த சில நாட்களாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள், வணிகர்கள், மாணவர்கள் என பொதுமக்களிடம் மதுபான கடைக்கு எதிராக கையெழுத்து பெற்று வருகின்றனர்.

ADVERTISEMENT



ADVERTISEMENT

நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு புதிய பேருந்து நிலையம் கேட்டு கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் போராட்டம் நடத்தி வருகின்றனர் அப்பகுதி மக்கள். ஆனால் அதற்கு செவிசாய்க்காத அதிமுக அரசு, தற்காலிகமாக உருவாக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தின் அருகிலேயே டாஸ்மாக் கடையை திறக்க முயற்சிக்கிறது.


அந்த பேருந்து நிலையத்தை சுற்றி ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள், மிகப்பெரிய துணிக்கடைகள், மருத்துவமணைகள், மற்றும் அரசு அலுவலகங்களுக்கு செல்லும் வழியாக இருக்கும் இடத்தில் இடையூறை ஏற்படுத்தும் விதமாக பேருந்து நிலையத்தை ஒட்டியே அரசு டாஸ்மாக் மதுபான கடை அமைப்பதற்கான கட்டுமான பணிகள் வேகமாக நடைப்பெற்றுவருகிறது.


இதனை உடனடியாக நிறுத்த வேண்டுமென மாவட்ட ஆட்சியர், கோட்டாச்சியர், வட்டாச்சியர், நகராட்சி ஆணையர் ஆகியோருக்கு மனுக்களை அனுப்பியுள்ளனர். நடவடிக்கை இல்லாத நிலையில் போராட்டங்களை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT