ADVERTISEMENT

"முதலமைச்சரிடம் நாளை அறிக்கை சமர்ப்பிக்க உள்ளோம்"- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி!

06:24 PM Sep 14, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT


சென்னையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (14/09/2021) மாலை 05.00 மணிக்குக் காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில், பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "6- ஆம் வகுப்பு முதல் 8- ஆம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறப்பது குறித்த அறிக்கையை முதலமைச்சரிடம் நாளை (15/09/2021) சமர்ப்பிக்க உள்ளோம். 6- ஆம் வகுப்பு முதல் 8- ஆம் வகுப்பு வரை அல்லது 1- ஆம் வகுப்பு முதல் 8- ஆம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறக்கலாமா என ஆலோசித்தோம். அதிகபட்சமாகக் கன்னியாகுமரியில் 87% பேரும், குறைந்தபட்சமாகக் கோவையில் 67% மாணவ, மாணவிகளும் பள்ளிக்கு வந்துள்ளனர். கோவை மாவட்டத்தில் தான் பள்ளிகளில் மாணவர்களின் வருகை குறைவாக உள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்ட 14 நாட்களில் இதுவரை 83 மாணவ, மாணவிகளுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது" என்றார்.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT