ADVERTISEMENT

5 புதிய ஆவின் தயாரிப்புகள் அறிமுகம்

03:02 PM Jan 19, 2022 | suthakar@nakkh…

ADVERTISEMENT


தமிழக அரசின் ஆவின் நிறுவனம் மேலும் 5 புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்துள்ளது. தமிழகத்தில் பெரிய நிறுவனங்களில் ஒன்றான ஆவின், பால் மற்றும் பால் சார்ந்த தயாரிப்புகளை உற்பத்தி செய்து வருகிறது. விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் பால் முறையான பதப்படுத்தலுக்குப் பிறகு பேக் செய்யப்பட்டு மூன்று விதமான தன்மைகளில் ஆவின் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பாலுடன், நெய், பால்கோவா முதலியவற்றையும் ஆவின் நிறுவனம் தானே உற்பத்தி செய்து பொதுமக்களிடம் விற்பனை செய்து வருகிறது.

ADVERTISEMENT

அந்த வகையில் தற்போது புதிதாக 5 தயாரிப்புகளைப் பொதுமக்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. அதன்படி பிரீமியம் மில்க் கேக், யோகார்ட் பானம், பாயாசம் மிக்ஸ், பால் புரத நூடுல்ஸ், டெய்ரி ஒயிட்னர் ஆகிய பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிமுகம் செய்தார். இந்நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் உடனிருந்தார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT