ADVERTISEMENT

”வக்பு வாரிய தலைவர் ரபியுல்லாவை கைது செய்ய வேண்டும்..” - எச்.ராஜா 

05:38 PM Sep 14, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், கும்பக்குடி, அரசங்குடி, கிளியூர், கடியா குறிச்சி, திருச்செந்துறை, கோமாகுடி உள்ளிட்ட 22 கிராமங்களும், அதேபோன்று திருச்சி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட புத்தூர், தென்னூர் ஆகிய பகுதிகளில் உள்ள 25,500 ஏக்கர் நிலம் வக்பு வாரியத்திற்கு சொந்தமான நிலம் எனவும் இந்தப் பகுதியில் பத்திரப்பதிவு கூடாது என பத்திர பதிவு துறைக்கு வக்பு வாரியம் கோரிக்கை விடுத்திருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் காத்திருப்பு போராட்டம் அறிவித்திருந்த நிலையில், ஸ்ரீரங்கம் RDO வைத்தியநாதன் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தைக்கு பிறகு வக்பு வாரியம் உரிமை கொண்டாடும் பகுதிகளில் பத்திரப்பதிவு மேற்கொள்ளலாம் என அறிவித்து நிலப் பிரச்சனைக்கு வைத்தியநாதன் தற்காலிக முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்த நிலையில் திருச்சி மாவட்டம், ஜீயபுரத்தையடுத்த திருச்செந்துறை, சந்திரசேகர சுவாமி ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்த பாஜக மூத்த தலைவர் எச் ராஜா, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், “இந்த கிராமத்தில் வசிக்கும் இந்துக்கள் சொத்துக்களை கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

நடப்பது திமுக ஆட்சியா? அல்லது மாலிக்காபூர் ஆட்சியா? என்ற சந்தேகம் எழுகிறது. இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான கோயில் நிலங்கள் குறித்து சட்டமன்றத்தில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு, ஒரு நீண்ட பட்டியலை வாசித்தார். அந்த பட்டியலின் அடிப்படையில் இந்து கோயில்களுக்கு சொந்தமான சொத்து விவரங்களை முழுமையாக சேகரித்து, சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் அலுவலகத்தில் அனுப்பி வைக்க வேண்டும்.

இந்த நிலங்கள் அனைத்தும் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான நிலங்கள் என தகவல் பலகையில் ஒட்டி வைத்திருக்க வேண்டும். 15 தினங்களுக்குள் சேகர் பாபு இதனை செய்ய வேண்டும். இல்லை என்றால் உணர்வுள்ள இந்துக்கள் ஒன்று கூடி தொடர் போராட்டங்களை முன்னெடுப்பார்கள். ஆண்டாண்டு காலமாய் இந்து கிராமங்களில் வசித்து வரும் இந்துக்களை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள வக்பு போர்டு CEO ரபியுல்லாவை சஸ்பெண்ட் செய்வதுடன் கைது செய்ய வேண்டும்” என பேசினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT