ADVERTISEMENT

தனித்தொகுதி மாறவேண்டுமா...? நோட்டாவிற்கு வாக்களியுங்கள்.. பிரச்சாரத்தில் இறங்கிய விவசாய அமைப்பு

09:18 PM May 12, 2019 | nagendran

நீண்ட நெடுங்காலமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தனித்தொகுதியாகவுள்ள ஒட்டப்பிடாரம், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதிகளையும், தென்காசி பாராளுமன்றத் தொகுதியையும் பொதுத் தொகுதியாக மாற்றவேண்டும் எனில் ஒட்டப்பிடாரம் தனித்தொகுதியில் நோட்டாவிற்கு வாக்களியுங்கள் என விவசாயிகள் அமைப்பிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இதுக்குறித்து நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மருதங்கிணறு கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் அமைப்பின் முத்துப்பாண்டியோ, " இந்தியா சுதந்திரம் அடைந்து 72ஆண்டுகள் கடந்துவிட்டது. இந்தியாவில் உள்ள சட்டமன்ற மற்றும் நாடளுமன்ற தனித்தொகுதிகள் 10 ஆண்டுகளுக்கு முன் சுழற்சி முறையில் பொதுதொகுதிகளாக மாற்றப்பட்ட நிலையில் தமிழகத்தில் தென்மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒட்டப்பிடாரம், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் ஆகிய சட்டமன்றதொகுதிகளும், தென்காசி பாராளுமன்ற தொகுதியும் நீண்ட காலமாக சுழற்சி முறையில் மாறாமல் உள்ளது.

மேற்கண்ட தொகுதிகளில் உள்ள வாக்களிக்க தகுதியான பொதுபிரிவினர் மட்டும் இன்னும் சுதந்திரம் அடையாமல் உள்ளனர். மேற்கண்ட தொகுதிகள் பொதுதொகுதியாக மாற தற்போது நடைபெறும் ஒட்டப்பிடாரம் தனி தொகுதியில் உள்ள பொதுபிரிவு வாக்காளர்கள் சிந்தித்து வாக்களிக்கவேண்டும். ஒட்டப்பிடாரம் தொகுதியில் 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களுக்கு 15 சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே பொதுபிரிவு வாக்காளர்கள் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்ற 16 வரிசையில் உள்ள பேலட் பட்டனில் 40 சதவிகித பொதுபிரிவு வாக்காளர்கள் வாக்களித்தால் அடுத்த தேர்தலில் தனித்தொகுதிகள் அனைத்தும் பொது தொகுதியாக மாறும் வாய்ப்பு உள்ளது. இதனால் பொதுபிரிவு வாக்களர்களுக்கு தேர்தலில் வாய்ப்பு கிடைக்கும்.

அதேபோல் இந்த தனித்தொகுதிகள் பொதுதொகுதியாக மாறும் போது ஏற்கனவே உள்ள பொதுதொகுதிகள் தனித்தொகுதியாக மாறும். அப்போது அந்த தொகுதிகளில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் தேர்தலில் போட்டியிடுகின்ற வாய்ப்பு கிடைக்கும். சுழற்சி முறையில் எல்லா தொகுதிகளும் மாற்றம் அடைந்தால் அனைத்து பிரிவினரும் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிலாம் என்ற சூழ்நிலை உருவாகும். எனவே இதற்கு முன்னோடியாக ஒட்டப்பிடாரம் தேர்தலில் சிந்தித்து வாக்களிக்கவேண்டும்." என அறிக்கை வெளியிட்டுள்ளார். இதனால் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் பரப்பரப்பு நிலவி வருகின்றது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT