ADVERTISEMENT

ஜன. 11, 12ம் தேதிகளில் வாக்காளர் சிறப்பு முகாம்! 

03:29 PM Jan 07, 2020 | santhoshb@nakk…

தமிழகத்தில் வரும் ஜனவரி 11, 12 ஆம் தேதிகளில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். மேலும் ஜனவரி 4, 5 ஆம் தேதிகளில் நடந்த வாக்காளர் முகாமில் 9 லட்சம் பேர் திருத்தம் கோரி விண்ணப்பித்துள்ளனர் என்று கூறினார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இணைய தளத்தின் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், முகவரி திருத்தம் உள்ளிட்டவைகளை மேற்கொள்ளவும், புதியதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும் https://www.elections.tn.gov.in/Electoral_Services.aspx என்ற இணைய தளத்தை அணுகலாம் (அல்லது) https://www.nvsp.in/ என்ற இணையதளத்தை மக்கள் பயன்படுத்தி எளிதாக திருத்தம் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




மேலும் இணையதளத்தில் மூலம் விண்ணப்பிக்கும் வாக்காளர்கள் தங்களது விண்ணப்பத்தின் நிலையை இதே இணையதளத்தை பயன்படுத்தி எளிதில் அறிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.



Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT