ADVERTISEMENT

சாத்தூரில் அமமுக வேட்பாளர் தோட்டத்தில் இருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

09:21 PM Apr 17, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT


விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அமமுக வேட்பாளர் சுப்ரமணியன் தோட்டத்தில் இருந்து கட்டுக்கட்டாக 33 லட்சம் பறிமுதல் செய்தனர் தேர்தல் பறக்கும்படையினர். சுப்பிரமணியன் தேர்தல் அலுவலகத்தில் இருந்து 10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் தோட்டத்திலிருந்து 33 லட்சம் பறிமுதல் செய்துள்ளனர் பறக்கும்படையினர். மொத்தம் 43 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதை அடுத்து இந்த பணம் பறிமுதல் தொடர்பாக மகாதேவன் என்பவரை கைது காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 43 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து சுப்பிரமணியன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT


தகுதி நீக்கம் செய்யப்பட்ட சாத்தூர் எம்.எல்.ஏ சுப்பிரமணியன், மீண்டும் அதேதொகுதி இடைத்தேர்தலில், அ.ம.மு.க சார்பில், போட்டியிடுகிறார். இந்நிலையில், சாத்தூர் அருகே எதிர்கோட்டை என்ற இடத்தில் உள்ள அவரது அலுவலகத்திற்கு, மாலை 4.20 மணியளவில், தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் வந்தனர். அங்கு அவர்கள் நடத்திய அதிரடி சோதனையில், 10 லட்ச ரூபாயை பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து, தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அ.ம.மு.க வேட்பாளர் சுப்பிரமணியனின் தோட்டத்திலும், தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அந்த சோதனையில், 33 லட்ச ரூபாயை கைப்பற்றியதாக, தேர்தல் பறக்கும்படையினர் தெரிவித்தனர். சுப்பிரமணியனின் அலுவலகத்தில் பணியாற்றி வந்த மகாதேவன் என்பவரை, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பிடித்துச் சென்று, ஆலங்குளம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். ஆண்டிப்பட்டியில், அ.ம.மு.க பிரமுகர் வணிக வளாகத்தில் இருந்து, ஒரு கோடியே 48 லட்ச ரூபாய், செவ்வாய்க்கிழமை இரவு கைப்பற்றப்பட்ட நிலையில், அதே கட்சியைச் சேர்ந்த வேட்பாளருக்குச் சொந்தமான அலுவலகத்தில் இருந்து, 43 லட்ச ரூபாய் பிடிபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT