tamilnadu health minister pressmeet

Advertisment

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தஞ்சை, கள்ளக்குறிச்சி, கடலூர் உள்பட 8 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு சிறிதளவு உயர்ந்துள்ளது. கரோனா அதிகரிக்கத் தொடங்கிய மாவட்டங்களில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இனி மாவட்ட வாரியாக எடுக்கப்படும் கரோனா மாதிரி பரிசோதனை விவரமும் வெளியிடப்படும். தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ள மாவட்டங்களில் நேரில் ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் கரோனா தொற்று குறைந்துள்ளது" எனத் தெரிவித்தார்.