ADVERTISEMENT

அண்ணாவை அடையாளம் காட்டியது எம்.ஜி.ஆராம்!- 'அட்ரா சக்க' அமைச்சர்!

10:02 AM Jan 22, 2020 | santhoshb@nakk…

விருதுநகர் தேசபந்து மைதான திடலில் நடைபெற்ற எம்ஜிஆர் 103- வது பிறந்த தின பொதுக்கூட்டத்தில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியபோது,

ADVERTISEMENT


"அண்ணா பக்கத்தில் எம்ஜிஆர் இருந்ததால்தான் இந்த நாட்டிற்கு அண்ணா அடையாளம் காட்டப்பட்டார்; முதலமைச்சர் ஆக்கப்பட்டார். எம்ஜிஆரை பார்த்துத்தான் அண்ணாவிற்கே ஓட்டு போட்டார்கள்.

ADVERTISEMENT


அதன்பின், கலைஞருக்கும் எம்ஜிஆரால்தான் ஓட்டு போட்டார்கள். திமுகவிற்கு எம்ஜிஆர் இருந்ததால்தான் ஓட்டு விழுந்தது, அவரைத் தூக்கி எறிந்த பிறகு, எம்ஜிஆர் உயிரோடு இருந்தவரை கருணாநிதியால் முதலமைச்சராக முடியவில்லை. 10 ஆண்டுகள் வனவாசம் சென்றார் கலைஞர்.


கொடுக்கின்ற கட்சி அதிமுக. அதைக் கெடுக்கின்ற கட்சி திமுக. திமுக காரங்க யாருக்கும் வேஷ்டி, சேலைன்னு தரமாட்டாங்க. சேலைன்னு கொடுத்தாலும் கட்சிக்காரங்க கொண்டு போயிடுவாங்க." என்றார்.

வாழ்க அண்ணா நாமம் எனச் சொல்லியே அரசியலில் வெற்றி கண்டார் எம்.ஜி.ஆர். அண்ணா நாமத்தை ஜெயலலிதாவும் உச்சரிக்கத் தவறியதில்லை. கட்சியின் பெயரில் அண்ணா இருக்கிறார்; கொடியிலும் அவர் உருவமே பொறிக்கப்பட்டுள்ளது. அண்ணா நீ என் தெய்வம் என சினிமாவிலும் எம்.ஜி.ஆரால் போற்றப்பட்டவர், அண்ணா.

இத்தனை பெருமைக்குரிய அண்ணாவை, எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா மேடையில் குறைத்து மதிப்பிட்டதை என்னவென்று சொல்வது?

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT