தனசீலனை கொலை செய்தவர் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்...

Viluppuram youngster case accused arrested

விழுப்புரம் அருகில் உள்ள நன்நாடு கிராமத்தைச் சேர்ந்த வீராசாமி என்பவரின் மகன் 35 வயது தனசீலன். நேற்று தனது வீட்டில் தலை, முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டிருந்தார். இது தொடர்பாக விழுப்புரம் தாலுகா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த கொலை வழக்கில் அதே ஊரைச் சேர்ந்த கேசவன் என்பவர் மகன் அஜித் (26) என்பவரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், இவரும் கொலை செய்யப்பட்ட தனசீலனும் நண்பர்கள் எனத் தெரியவந்துள்ளது. மேலும் விசாரணையில், சம்பவத்தன்று மது அருந்தும் போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

மேலும் அவர் அளித்த வாக்குமூலத்தில், கடந்த 19ஆம் தேதி தனசீலன் வீடு அருகே நண்பர்கள் கும்பலாக மது அருந்திவிட்டுச் சூதாடிக்கொண்டிருந்ததாகவும், அப்போது இவர் அங்கு சென்றதாகவும் தெரிவித்தார். அப்போது தனசீலனிடம் அஜித் மதுபாட்டில் கேட்டுள்ளார். அவர் தர மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.

அவர்களைத் தடுத்து வீட்டிற்கு அனுப்பி உள்ளனர் அங்கிருந்த சக நண்பர்கள். நண்பர்கள் முன்னால் தனசீலன் தாக்கியது அவமானமாகப் போய்விட்டது அஜீத்துக்கு. இதனால், கடும் ஆத்திரத்துக்கு உள்ளான அஜித், அன்று இரவு தனசீலன், தன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது வீட்டு ஓட்டை பிரித்து விட்டு உள்ளே இறங்கி மது போதையில் தூங்கிக்கொண்டிருந்த தனசீலனை அங்கு கிடந்த சவுக்கு கட்டையால் தலையில் தாக்கியுள்ளார்.

இதில் தலை, முகம் சிதைந்து போனது. மேலும் தலையணையை எடுத்து தனசீலன் முகத்தில் வைத்து அழுத்தியுள்ளார். அவர் இறந்து போனதை உறுதிசெய்த பிறகு அங்கிருந்து வெளியேறியுள்ளார். அஜித், போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தை அடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார் அவரை கைது செய்துள்ளனர். மேலும் தனசீலனுக்கும் அஜித்திற்கும் ஏற்கனவே பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக முன்விரோதம் இருந்துள்ளது. அஜீத் மீது சூதாட்டம், வழிப்பறி, கள்ளத்தனமாக மது விற்பனை போன்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக ஏற்கனவே விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளது என்கிறார்கள் காவல்துறையினர்.

Viluppuram
இதையும் படியுங்கள்
Subscribe