ADVERTISEMENT

விஏஓ குரல் பதிவால் ஆபத்தில் இருந்து தப்பிய கிராம மக்கள்! 

05:20 PM Nov 02, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் வடக்கு கிராமத்திலிருந்து அண்ணாநகர் வழியாக பனங்குளம் செல்லும் வழியில் உள்ள பனை மரங்களில் விஷ வண்டுகள் கூடு கட்டியுள்ளது. விஷ வண்டுகளின் கூடுகள் மீது பறவைகள் அடித்ததால் வேகமாக வெளியேறிய விஷவண்டுகள் அந்த வழியாக சென்ற கிஷோர், விஷ்வா, ராஜா, தங்கவேல், ஜீவானந்தம் உள்பட பலரை விரட்டி விரட்டி கடித்துள்ளது.

ADVERTISEMENT

விஷ வண்டுகள் கடித்து காயமடைந்தவர்களுக்கு முகம், கை, கால்கள் வீக்கமடைந்து மயங்கும் நிலைக்கு வந்துள்ளனர். அவர்களை கீரமங்கலம் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்த பின் 3 பேரை மேல்சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். விஷ வண்டுகள் கடித்துள்ளதால் அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் தனலெட்சுமி உடனடியாக கீரமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அத்தோடு கிராமத்திற்கான தகவல் தளமாக உள்ள வாட்ஸ் அப் குழுவில், "சம்மந்தப்பட்ட சாலையில் பனை மரங்களில் விஷ வண்டுகள் கூடுகட்டியுள்ளது. அந்த வண்டுகள் பலரை கொட்டியுள்ளதால் யாரும் அந்த சாலை வழியாக செல்ல வேண்டாம். மாற்று வழியில் செல்லவும்" என்று முன்னெச்சரிக்கை குரல் பதிவு பதிவிட்டார். மக்கள் யாரும் அந்த வழியாகச் செல்லாததால் பெரிய அளவிலான ஆபத்துகள் தடுக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT