Car - Cargo Van Collision; One person was lost their live; 4 people, including silver merchants, were seriously injured

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள கொண்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்த மணிவேல் மகன் அரவிந்த் (வயது30) ஓட்டிச் சென்ற சரக்கு வேன் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் இருந்து கைகாட்டி நோக்கி போகும் போது திடீரென ஸ்டியரிங் இணைப்பு துண்டிக்கப்பட்டு முன்பக்க சக்கரங்கள் தாறுமாறாக ஓடி வேகமாக திரும்பிய போது பின்னால் வந்த கார் மோதியது.

Advertisment

இந்த விபத்தில் காரில் சென்ற சேலத்தைச் சேர்ந்த வெள்ளி வியாபாரிகள் பைசல் (வயது43), அவரது மகன் பர்ஹான் (வயது14), மணிகண்டன் (வயது43) ஆகியோர் காயமடைந்தனர். மேலும் கார் ஓட்டுநர் பூவரசக்குடி குணசேகரன் மகன் வெங்கடேசன் (வயது 24) மற்றும் சரக்கு வேன் ஓட்டுநர் அரவிந்த் ஆகியோர் படுகாயம் அடைந்து வாகனங்களின்இடிபாடுகளில் சிக்கித் தவித்தனர்.

இவர்களை உள்ளூர் இளைஞர்கள் மற்றும் கீரமங்கலம் தீயணைப்பு வீரர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் கீரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காரில் இருந்த வெள்ளி பொருட்களை கைகாட்டியை சேர்ந்த ஒரு நகைக்கடைக்காரரிடம் ஒப்படைத்தனர்.

Advertisment

இதில் கார் ஓட்டுநர் வெங்கடேசன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 4 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து கீரமங்கலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.