ADVERTISEMENT

’விஜயகாந்த் சிங்க கர்ஜனையுடன் மீண்டும் வருவார்’- பிரேமலதா விஜயகாந்த்

07:56 AM Nov 27, 2018 | sakthivel.m

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மற்றும் கீழ் மலை, மேல்மலை பகுதிகளில் கஜா புயல் கோரத்தாண்டவம் ஆடியதின் மூலம் மலை கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அப்படி இருந்தும் கூட ஆளும் கட்சியை விட திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து நிவாரண உதவிகள் வழங்கி ஆறுதல் கூறி வருகிறார்கள்.

ADVERTISEMENT

இந்த நிலையில் தான் கொடைக்கானல் மலை கிராம மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி ஆறுதல் கூறுவதற்கு தேமுதிக கட்சியின் மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கழக துணை செயளாலர் சுதிஸ் மற்றும் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் ஆகியோர் வத்தலகுண்டு வழியாக வந்த போது வத்தலகுண்டு ஒன்றிய செயளாலர் கருத்த பாண்டி தலைமையில் கட்சி பொறுப்பாளர்கள் அய்யம்பாளையம் பிரிவில் சிறப்பான வரவேற்பு கோடுத்தனர்.

அப்பொழுது பட்டிவீரன்பட்டி பேருர் கழக செயளாலர் நாகேந்திரன் சுவிதா தம்பதியரின் மகனுக்கு பெயர் வைக்க வேண்டும் என வலியுறுத்திதால் அதை தொடர்ந்து அந்த குழந்தைக்கு தவசிகாந்த் என்று பெயர் சூட்டினார்.


அதன் பின்னர் கொடைக்கானல் சென்ற பிரேமலதா கொடைக்கானலில் பாதிக்கப்பட்ட கல்லறை மேடு புதுக்காடு பேத்துப்பாறை உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டார். அதன் பின் குஞ்சுகள் விளையாட்டு மைதானத்தில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுமார் 5 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை பிரேமலதா விஜயகாந்த் வழங்கினார்.

அதன்பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், கஜா புயலால் பாதித்த அடுத்த நாளே பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தேமுதிக சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. இரண்டாம் கட்டமாக திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல், வேடசந்தூர், நத்தம் பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு நிவாரணம் வழங்கியுள்ளோம். அதனைத் தொடர்ந்து 28.29 தேதிகளில் புதுக்கோட்டையிலும் தஞ்சை வேதாரண்யம், திருவாரூர் பகுதிகளுக்கும் சென்று புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு நிவாரண உதவிகள் வழங்க இருக்கிறேன்.

கொடைக்கானல் பகுதியில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வீடுகள் மரங்கள் மின் கம்பங்கள் சேதம் அடைந்துள்ளன. இதற்கு காரணம் தைல மரங்கள் தான். இவை அடிக்கடி விழுவதால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே ஆபத்தினை விளைவிக்கக்கூடிய அனைத்து மரங்களையும் அகற்றவேண்டும் . கொடைக்கானலில் பல ஆண்டுகளாக எந்தவிதமான அபிவிருத்தி திட்டங்களும் நடைபெற உள்ள புயல் பாதிப்புக்கு ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என வெறும் வாயால் மட்டுமே முதலமைச்சர் கூறியுள்ளார். அத்துடன் மத்திய அரசிடம் 15,000 கோடி கேட்டுள்ளார். அது எப்போது கிடைக்கும் என்று தெரியவில்லை. முதலமைச்சரும் கட்சி நிர்வாகிகளும் மக்களை சந்திக்க பயப்படுகின்றன. ஆனால் மக்கள் கொந்தளிப்பு கொந்தளிப்பில் உள்ளனர். 10 நாட்களாக குடிக்க தண்ணீர் இல்லாமல் மறியல் செய்கின்றனர். பயந்து ஓடுவார்கள் ஆட்சிக்கு தேவையில்லை. அப்படி ஓடிக்கொண்டிருந்தால் மக்கள் உங்களை ஓட வைக்கும் நாள் விரைவில் வரும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேளுங்கள் 20 தொகுதி இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் தெளிவாக உள்ளனர். மாற்றத்துக்காக அவர்கள் தயாராகி வருகின்றனர். விஜயகாந்த் சிங்க கர்ஜனையுடன் மீண்டும் வருவார்’’ என்று கூறினார்
.

அதைத் தொடர்ந்து வேடசந்தூர் அருகே உள்ள தொட்டியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பிரேமலதா விஜயகாந்த் ஆறுதல் கூறினார்.
பிரேமலதா விஜயகாந்த் உடன் மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி துணைச் செயலாளர் செந்தில்குமார் நகர செயலாளர் மோகன் பொருளாளர் கருணாநிதி ஒன்றிய செயலாளர் கணேசன் துணைச் செயலாளர் மகேந்திரன் உள்பட கட்சிப் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT