ADVERTISEMENT

அமைச்சரின் தந்தை எம்.பியா? கூட்டுறவு வங்கி தலைவரா? 

01:43 AM Feb 23, 2019 | bagathsingh

ADVERTISEMENT

அதிமுகவினர் இதுவரை திமுகவை குடும்ப கட்சி, குடும்ப உறுப்பினர்களே பதவிகளுக்கு வருவதாக மேடைக்கு மேடை விமர்சனம் செய்து வந்த நிலையில் தற்போது எம்பி தேர்தலில் போட்டியிட ஓபிஎஸ் மகன், அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பி , இப்படி பலரும் விருப்ப மனு கொடுத்து திமுகவுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை காட்டிவிட்டனர்.

ADVERTISEMENT

அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பி கரூர் பாராளுமன்றத் தொகுதிக்கு விருப்ப மனு கொடுத்தவுடனேயே பரபரப்பு தொற்றிக் கொண்டது. கடந்த 4 வருடமாக கரூர் தொகுதியில் உள்ள விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்குள் எம்.பியும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை எட்டிக்கூட பார்க்காத நிலையில் கடந்த சில மாதங்களாக அமைச்சர் விஜயபாஸ்கர் கிராமம் கிராமமாக அழைத்து வந்து மக்கள் சந்திப்பு மனு வாங்குவது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தினார்.

இந்த நிலையில் தான் சின்னத்தம்பி விருப்ப மனு கொடுத்திருப்பது கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து பாஜகவை விமர்சனம் செய்து வந்த தம்பிதுரைக்கு செக் வைக்கவே சின்னத்தம்பியை விருப்பமனு கொடுக்க வைத்து தம்பிதுரையை ஆப் பண்ணி இருக்கிறது பா ஜ க தலைமையும் அதிமுக தலைமையும் என்று ர. ர. க்களே கூறுகின்றனர்.


இந்த நிலையில் தான் வெள்ளிக்கிழமை புதுக்கோட்டை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் புதிய இயக்குநர்கள் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பெறப்பட்ட நிலையில் மொத்தம் 21 இயக்குநர்களுக்கு 32 வேட்பாளர்கள் வேட்பு மனு கொடுத்துள்ளனர். அதில் ஒருவர் அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பி. மீண்டும் ஒரு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து புதுக்கோட்டை ர. ர. க்கள் கூறும் போது.. எம் பி சீட் வேண்டும் என்று விருப்ப மனு கொடுத்தார். அவர் மனு கொடுத்த பிறகு தம்பிதுரை இப்ப அமைதியாக மத்திய அமைச்சர்களை வரவேற்க தொடங்கிட்டார். இந்த நிலையில தான் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆக விரும்பிய சின்னத்தம்பி இன்று வேட்பு மனு கொடுத்திருக்கிறார். திங்கள் கிழமை வாபஸ் காலம் முடிகிறது. அன்று 32 பேரில் 11 பேர் தங்கள் மனுக்களை வாபஸ் பெறுவார்கள். மீதமுள்ள 21 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வாகி இயக்குநர் ஆவார்கள். அதன் பிறகு அந்த 21 இயக்குநர்களில் சின்னத்தம்பி தலைவர் பதவிக்கு வேட்பு மனு கொடுப்பார்.

அமைச்சரின் தந்தையல்லவா அதனால வேற யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யமாட்டாங்க. அப்பறம் போட்டியின்றி மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் ஆகிடுவார். துணைத் தலைவரா அர்களுக்கு ரொம்ப வேண்டியவரை நியமிக்க போறாங்க என்றவர்கள்.. அமைச்சரின் தந்தை எம். பி யா? மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவரா என்ற பட்டிமன்றமே நடக்கிறது . தலைவர் ஆகிடுவார்.
ஆனா இதில் அமைச்சருக்கு விருப்பம் இல்லயாம். அதாவது ந. செ. பாஸ்கரை மாவட்ட தலைவராக்களாம் என்று இருந்தாராம். ஆனால் சின்னத்தம்பி பிடிவாதமா இருக்காராம். அதனால தலைவர் தேர்தலுக்கு முன்னால சின்னத்தம்பி சமாதானம் ஆகிட்டா தலைவர் மாறலாம்.. சமாதானம் ஆகலன்னா சின்னத்தம்பி தான் தலைவர் என்றனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT