ADVERTISEMENT

“இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிராக செயல்படுவது கண்டிக்கத்தக்கது” - வேலுமணி ட்வீட்!

10:41 AM Jul 28, 2020 | suthakar@nakkh…

புகழ்பெற்ற பாலிவுட் நடிகர், மறைந்த சுஷாந்த் நடிப்பில் நேற்று முன்தினம் வெளியான திரைப்படம் ‘தில் பேச்சாரா’. இந்த திரைப்படத்துக்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ADVERTISEMENT

மிகநீண்ட இடைவெளிக்கு பிறகு இவரின் இசையில் பாலிவுட் திரைப்படம் ஒன்று வெளியானதில் அவருடைய ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இந்நிலையில், தனியார் வானொலி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரஹ்மான், பாலிவுட்டில் தான் வேலை செய்ய கூடாது என்று சிலர் நினைப்பதாகவும், எனக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவித்து வருவதாகவும் கூறியுள்ளார். இந்த படத்தின் இயக்குநரிடம்கூட ரஹ்மானிடம் சென்றால் பாடல் இசையமைத்து தர நீண்ட நாட்கள் ஆகும் என்று தெரிவித்துள்ளார்கள். எனக்கு இறைவன் மீது நம்பிக்கை இருக்கிறது என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்தியாவுக்கு புகழ் சேர்த்த இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராக செயல்படுவது கண்டிக்கத்தக்கது. ஏ.ஆர்.ரகுமானுக்கு தனது மனப்பூர்வமான ஆதரவை தெரிவிப்பதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ட்வீட் செய்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT