ADVERTISEMENT

பெண் வாகன ஓட்டிகளுக்கு அதிகாரியின் ஆபாசமெசேஜ்...

01:20 PM Oct 26, 2019 | Anonymous (not verified)

வேலூர் மாநகரில் உள்ள இளம்பெண்கள், அழகான பெண்களுக்கு இரவு நேரங்களில் வாட்ஸ்அப்களில் ஆபாச மெசேஜ்களும், ஆபாசமான புகைப்படங்களும் வந்துள்ளன. இதனால் அதிர்ச்சியான அவர்கள் இதனை வீட்டில் எப்படி சொல்வது என தயங்கியுள்ளனர். இந்நிலையில் ஒரு பெண்மணி மட்டும் தனது கணவரிடம் தகவலை சொல்லியுள்ளார். அவர் அந்த எண் யாருடையது என செக் செய்தபோது, அது வேலூர் மாநகர போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் என தெரியவந்துள்ளது. அதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT


அவருக்கு எப்படி எண் கிடைத்தது என விசாரித்தபோது, சிக்னல்களில் வாகன தணிக்கை என்கிற பெயரில் வாகனங்களை நிறுத்தி சோதனையிடும்போது பெண்களிடம் அவர்களது செல்போன் எண்ணை வாங்கி நோட்டீல் எழுதிக்கொண்டுள்ளார். அந்த எண்களுக்கு தான் தனது எண்ணில் இருந்து இரவு நேரங்களில் ஆபாசமான மெசேஜ், போட்டோக்களை அனுப்பியுள்ளார் என தெரியவந்துள்ளது. அடுத்தடுத்து இப்படி மெசேஜ்கள் வந்ததை, சேமித்துக்கொண்ட அந்த பெண்ணின் கணவர், இதுப்பற்றி தனது நண்பர்களிடம் தகவல் சொல்ல அவர்கள் அக்டோபர் 26ந்தேதி பணியில் இருந்தவரை மடக்கி, இதுப்பற்றி கேட்க, என்னை மன்னிச்சிடுங்க, இனிமேல் அனுப்பமாட்டேன் என்றுள்ளார்.

"பொறுப்பான வேலையில் இருந்துக்கொண்டு இப்படி கீழ்தரமான வேலைகளை செய்வ, நாங்க மன்னிக்கனும்மா, அந்த பெண்ணின் மனசு என்னப்பாடு படும், இன்னும் எத்தனை பேருக்கு இப்படி அனுப்பியிருப்ப, அதனால் இதை சும்மா விட முடியாது" எனச்சொல்லி வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா பர்வேஷ்குமார்க்கு தகவல் தெரிவித்துள்ளனர்.


இதனைக்கேட்டு அதிர்ச்சியான அவர், போக்குவரத்து பணியில் இருந்து ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார் என்கிறது காவல்துறை வட்டாரம். பெண்களுக்கு ஆபாச தகவல்கள் அனுப்பி டார்ச்சர் செய்தவருக்கு இடமாறுதல் மட்டும்மே ? நன்றாக இருக்கிறது காவல்துறை அதிகாரியின் நீதி.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT