வேலூர் மாநகரில் உள்ள இளம்பெண்கள் மற்றும் பெண்களுக்கு வாட்ஸ்அப்களில் ஆபாச மெசேஜ்களும், ஆபாசமான புகைப்படங்களும் வந்துள்ளன. இதுப்பற்றி ஒரு பெண்மணி மட்டும் தனது கணவரிடம் தகவலை சொல்லியுள்ளார். அவர் தனது அரசியல் நண்பர்கள் உதவியுடன் அந்த எண் யாருடையது என செக் செய்தபோது, அது வேலூர் மாநகர போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் எண் என தெரியவந்துள்ளது.

Advertisment

vellore issue

அந்த எஸ்.ஐ அனுப்பிய மெசேஜ்களை சேமித்துக்கொண்ட அந்த பெண்ணின் கணவர், இதுப்பற்றி தனது அரசியல் நண்பர்களிடம் தகவல் சொல்ல அவர்கள் அமமுக பிரமுகர் அப்பு.பாலாஜி என்பவர் தலைமையில் அக்டோபர் 26ந்தேதி பணியில் இருந்தவரிடம், இதுப்பற்றி கேட்க, ”என்னை மன்னிச்சிடுங்க, இனிமே அனுப்பமாட்டேன்” என்றுள்ளார்.

Advertisment

”பொறுப்பான வேலையில் இருந்துக்கிட்டு, இப்படி கீழ்தரமான வேலைகளை செய்வீங்க, நாங்க மன்னிக்கனும்மா, அந்த பெண்களின் மனசு என்னப்பாடுபடும், அதனால் இதை சும்மா விட முடியாது” எனச்சொல்லி வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா பர்வேஷ்குமார்க்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனைக்கேட்டு அதிர்ச்சியான அவர், போக்குவரத்து பணியில் இருந்து அந்த எஸ்.ஐயை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார் எஸ்.பி ப்ரவேஷ்குமார். இதுப்பற்றி வேலூர் டி.எஸ்.பி பாலகிருஷண்ணாவை விசாரிக்க உத்தரவிட்டார்.

Advertisment

அவர் நடத்திய விசாரணையில், நடந்தது உண்மை என தெரியவந்தது. அதோடு, எஸ்.ஐயை எச்சரித்த அமமுக பிரமுகரான அப்பு.பாலாஜி என்பவரையும் அழைத்து விசாரித்துள்ளனர், இது தொடர்பாக ஒரு பெண்மணி புகார் தந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த அறிக்கையை எஸ்.பியிடம் டி.எஸ்.பி வழங்கிய நிலையில் ஆபாச மெசேஜ், படங்கள் அனுப்பிய எஸ்.ஐ, அக்டோபர் 30ந்தேதி சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார் என்கிறது வேலூர் மாவட்ட எஸ்.பி அலுவலகம்.

பெண்களின் எண் அவருக்கு எப்படி கிடைத்தது என விசாரித்தபோது, வாகன தணிக்கை என்கிற பெயரில் வாகனங்களை நிறுத்தி சோதனையிடும்போது பெண்களிடம் அவர்களது செல்போன் எண்ணை வாங்கி நோட்டீல் எழுதிக்கொண்டுள்ளார். அந்த எண்களுக்கு தான் தனது எண்ணில் இருந்து இரவு நேரங்களில் ஆபாசமான மெசேஜ், போட்டோக்களை அனுப்பியுள்ளார் என தெரியவந்துள்ளது.