ADVERTISEMENT

"நிதி இழப்பு என்றாலும் திட்டங்களில் குறைவில்லை" -முதல்வர் பழனிசாமி பேட்டி!

01:44 PM Aug 20, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மூன்று மாவட்ட வளர்ச்சி பணி, கரோனா தடுப்பு பணிகள் பற்றிய ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் பழனிசாமி, "வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கரோனா பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது. கரோனா பாதிப்பை கண்டறிவதற்கு வேலூரில் 2,609 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3,350 காய்ச்சல் முகாம்கள் நடைபெற்றுள்ளன. சிறப்பு குறைதீர் தீர்வு காணப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை வேலூர்- 11,667, ராணிப்பேட்டை- 7,524, திருப்பத்தூர்- 4,650. திருப்பத்தூர் மாவட்டத்தில் சுய உதவிக்குழுக்களுக்கு மூன்று ஆண்டுகளில் ரூபாய் 583.45 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் பிற பகுதிகளைச் சேர்ந்த பெண் தொழிலாளர்களுக்கு விடுதி கட்ட பரிசீலிக்கப்பட்டு வருகிறது. தென்பெண்ணையாறு- பாலாறு இணைப்பு திட்டத்திற்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. இரு சக்கர வாகன திட்டத்தில் பயனடைந்தோர் என்ணிக்கை வேலூர்- 3,882, ராணிப்பேட்டை- 3,878, திருப்பத்தூர்- 3,540. கரோனாவை தடுக்க குடும்ப அட்டையில் பெயர் உள்ள அனைவருக்கும் விலையில்லா முகக்கவசம் வழங்கப்பட்டுள்ளது. கரோனாவால் அரசுக்கு வருவாய் இழப்பு இருந்தாலும் மக்களுக்கான திட்டங்கள் குறைவின்றி நிறைவேற்றப்படுகிறது.

நீதிமன்ற உத்தரவு, மத்திய அரசு வழிகாட்டுதல் படி, விநாயகர் சதுர்த்தி கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கரோனா அச்சுறுத்தலால் மத ஊர்வலங்களுக்கு மத்திய அரசு அனுமதிக்கவில்லை; அதனை தமிழக அரசு பின்பற்றுகிறது". இவ்வாறு முதல்வர் கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT