ADVERTISEMENT

ஜோலார்பேட்டையில் இருந்து காவிரி நீர் ரயில் மூலம் சென்னைக்கு வந்தது;சுத்திகரிக்கப்பட்டு விநியோகம் 

03:13 PM Jul 12, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT


தமிழக தலைநகரான சென்னையில் வசிக்கும் மக்கள் குடிதண்ணீர் இல்லாமல் தவிக்கின்றனர். எப்போதாவது வரும் தண்ணீரை பிடிக்கும் சண்டையில் கத்தி குத்துவரை சென்றது. இதுப்பற்றி பல தரப்பிலும் இருந்து கேள்விகள் எழுப்பிய பின்பே, தமிழகத்தை ஆளும் அதிமுக, நடவடிக்கையில் இறங்கியது.

ADVERTISEMENT


வேலூர் மாவட்டத்துக்கு காவிரி நதியில் இருந்து கூட்டு குடிநீர் திட்டம் மூலமாக தண்ணீர் வந்துக்கொண்டிருக்கிறது. இந்த தண்ணீரே வேலூர் மாவட்ட மக்களுக்கு பற்றவில்லை என புகார் எழுந்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் பல இடங்களில் தினம் தினம் போராட்டம் நடைபெற்றுவருகிறது தண்ணீருக்காக.


இதனை கவனத்தில் கொள்ளாமல் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து தினமும் 1 கோடி லிட்டர் தண்ணீர், வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில்வே வேன்கள் மூலமாக கொண்டு செல்வது என முடிவு செய்யப்பட்டு இதற்காக 65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்றன.


இந்நிலையில் ஜீலை 12ந் தேதியான இன்று ஜோலார்பேட்டையில் இருந்து அதிகாரபூர்வமாக 25 லட்சம் லிட்டர் தண்ணீர் ரயில்வேயின் 50 வேன்களில் கொண்டு செல்லும் நிகழ்வை தொடங்கிவைத்தனர் அதிகாரிகள். இன்று காலை 7 மணிக்கு ஜோலார்பேட்டையில் இருந்து புறப்பட்டது. தற்போது சென்னைக்கு தண்ணீர் சென்று சேர்ந்தது. இந்த தண்ணீர் மீண்டும் சுத்திகரிக்கப்பட்டு சென்னை மக்களுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT